டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கியுள்ள படம் "டிராஃபிக் ராமசாமி'.
டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கியுள்ள படம் "டிராஃபிக்
ராமசாமி'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து மற்றும் எஸ் ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர், பொன்ராம், ராஜேஷ், சாமி என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஷங்கர் பேசும்போது...""யார் விதிகளை மீறினாலும் அதை எதிர்த்து போராடுகின்ற, அதை தட்டி கேட்கின்ற டிராஃபிக் ராமசாமி நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான மனிதர். அவரிடத்தில் ஒரு ஹீரோயிசம் தெரியும். மனசுக்குள் "கிளாப்ஸ்' தட்டியிருக்கிறேன். இப்படி ஒரு முன்மாதிரியான மனிதரை வைத்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. டிராஃபிக் ராமசாமி கேரக்டர் எப்படின்னா, கத்தி எடுக்காத "இந்தியன்' தாத்தா, வயதான "அந்நியன்' அம்பி. என் அலுவலகத்துக்கு பக்கத்தில்தான் இவர் குடியிருந்தார். அவரின் கதையெல்லாம் கேட்டு, அந்தக் கதையை ரஜினி சாரை வைத்து எடுக்கலாம் என யோசித்திருந்தேன். திடீரென்று ஒருநாள் இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தவுடனே, "ஆஹா, வட போச்சே'னு தோன்றியது. இந்தப் படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கேன்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com