இலங்கையில் வெளியான தமிழ்ப் படம்

இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வரும் படம் "கோமாளி கிங்ஸ்'.
இலங்கையில் வெளியான தமிழ்ப் படம்

இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வரும் படம் "கோமாளி கிங்ஸ்'. இலங்கையின் மூத்த தமிழ் திரைப்பட கலைஞரான எம்.எஸ். இரத்தினத்தின் பேரன் கிங் ரட்ணம் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். சத்யப்பிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜ கணேசன், கமலஸ்ரீ மோகன், நிரஞ்சனி சண்முகராஜா, அட்ரி அபிலாஷ், கஜன் கணேசன், நேகிதா ரிஷானி, கமல்ராஜ் பாலகிருஷ்ணன், ஜி.கே.ரெஜினால்டு உள்ளிட்ட பல இலங்கை வாழ் தமிழர்கள்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மகிந்த அபேசிங்காவும் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீராம் சச்சியும் இசையமைக்கிறார். சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் இந்தப் படம் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் தமிழகத்திலும் இப்படம் வெளியாக இருக்கிறது. லண்டனிலிருந்து உறவினரின் திருமணத்திற்காக தாயகம் திரும்பும் குடும்பம் ஒன்றுக்கு இலங்கையில் ஏற்படும் எதிர்பாராத சில சம்பவங்களும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும்தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்துள்ள இக்கதை த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டகளப்பு என இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் தமிழ் இந்தக் கதையின் கதாபாத்திரங்களில் வெளிப்படும். இலங்கையில் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம் என்று அனைத்துப் பகுதிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com