பதுங்கி பாயணும் தல

மீடியா ஃபேஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பதுங்கி பாயணும் தல'. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர்
பதுங்கி பாயணும் தல

மீடியா ஃபேஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பதுங்கி பாயணும் தல'. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி எழுதி இயக்குகிறார். முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. பாடல்களை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட டி.ராஜேந்தர், கயல் சந்திரன், ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள, "மாமனா மச்சானா...'" பாடல் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை முத்துப்பாண்டி எழுத, அந்தோணிதாசன் பாடியுள்ளார். இதன் சிங்கள் டிராக் பாடலை ஏற்கெனவே விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார் குறிப்பிடத்தக்கது. இணைய தளங்களில் இதுவரை சுமார் 2 லட்சம் பார்வையாளர்களை இந்தப் பாடல் கடந்துள்ளது. ஒரே கட்டமாக 53 நாள்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்ட நிலையில், 45 நாள்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com