360 டிகிரி 

மிஜோ மக்களின் மொழியில் "மி' என்பது மனிதனையும், "ஜோ' என்பது மலையையும் குறிக்கிறதாம்

• மிஜோ மக்களின் மொழியில் "மி' என்பது மனிதனையும், "ஜோ' என்பது மலையையும் குறிக்கிறதாம். "மிஜோ' என்றால் மலையில் வசிக்கும் மனிதன் என்று பொருள். மலைகள் நிரம்பிய பகுதி என்பதால் "மிஜோரம்' என்று பெயர் பெற்றது.

• இந்திய காப்புரிமைச் சட்டம் கடந்த 1957-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாக்டர் ராஜேந்திர பிரசாத் எழுதிய சுயசரிதம் ஆகும்.

• புல்லாங்குழலின் பழைய தமிழ்ப் பெயர் வங்கியம். சந்தனம், மூங்கில், டெங்காலி, கருங்காலி ஆகிய நான்கு மரங்களாலும், வெண்கலத்திலும் புல்லாங்குழல் செய்யலாம். இவற்றுள் மூங்கிலால் செய்வதே சிறந்தது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. குழல் செய்வதற்காக வெட்டிய மரத்தை ஓராண்டு காலம் நிழலில் காயவைத்து பிறகே துளையிட வேண்டுமாம்.
- நெ.இராமன்

* வர்த்தக கப்பல்களின் பக்கங்களில் வரையப்பட்டிருக்கும் கோடுகள் பிளிம்சால் கோடுகள் எனப்படும். கடல்நீரின் அடர்த்தி இடத்திற்கு இடம் மாறு
வதையும் இக்கோடுகள் காண்பிக்கின்றன. இதில் அபாயக் கோடு என்று உள்ளது. இக்கோட்டிற்கு சில செ.மீ. கீழாக கப்பல் மூழ்கும் வரை பொருட்களை ஏற்றலாம். 
-அ.ராஜா ரஹ்மான்

* கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது "எல்' போர்டு (க) மாட்டுவது பிரிட்டனில் 01.06.1935 முதல் அறிமுகமானது.

* தமிழ்நாடு சடுகுடுப் பாடல்களும், சடுகுடு ஆட்டமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் நவராஜ் செல்லையா. இது விளையாட்டுத் துறையில் முதல் ஆய்வு நூல்.
("உலகில் நடந்த முதல் நிகழ்ச்சிகள்' நூலிலிருந்து)
- முக்கிமலை நஞ்சன்

* உலகிலேயே மிக வினோதமான தெரு பிரான்ஸ் நாட்டில் பான்ட்ஸ்-டி-சி என்னும் ஊரில் இருக்கிறது. அங்கு, இரண்டு மைல் நீளமுள்ள 0ந்தத் தெரு - நான்கு பாலங்களையும், மூன்று தீவுகளையும் கடந்து செல்கிறது. அந்த ஊரில் சுமார் மூவாயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்கள் அனைவருமே இந்தத் தெருவில் தான் வாழ்கிறார்கள்.
- கே.பிரபாவதி

* டாக்டர் மு.வரதராசனாரின் "திருக்குறள் தெளிவுரை' இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தமிழில் வேறு எந்த நூலும் இவ்வளவு பிரதிகள் விற்பனையாகியிருக்க முடியாது.
- குலசை ஜேம்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com