ஹாரி - மேகன் குறித்த திரைப்படம்..! 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா- மிஷேலின் காதல், திருமணம், ஒபாமா பதவியில் இருந்த கடைசிக் காலத்தில் திரைப்படமாக வெளியானது
ஹாரி - மேகன் குறித்த திரைப்படம்..! 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா- மிஷேலின் காதல், திருமணம், ஒபாமா பதவியில் இருந்த கடைசிக் காலத்தில் திரைப்படமாக வெளியானது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசன் வில்லியம் - கேட் திருமணம் நடப்பதற்கு பதினோரு நாட்கள் முன்பாக அவர்களைக் குறித்த திரைப்படம் வெளியானது.
 மே 19-இல் நடக்கவிருக்கும் ஹாரி-மேகன் மார்க்கிள் திருமணத்தை ஒட்டி திரைப்படம் வெளியாகாமல் இருக்குமா..?
 மே 13-இல் டிவி சானல்களில் "ஹாரி - மேகன் - ஏ ராயல் ரொமான்ஸ்" திரைப்படம் வெளியாகிறது. மூன்று வாரங்களுக்கு முன் ஹாரி-மேகன் அறிமுகம், காதல், திருமணம் குறித்து "தி ராயல்ஸ் - ஹாரி-மேகன்' என்னும் தலைப்பில் காமிக்ஸ் புத்தகம் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.
 "ஹாரி - மேகன் - ஏ ராயல் ரொமான்ஸ்" படத்தில் உண்மை காதல் ஜோடியின் முகச் சாயல் உள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஹாரியாக முர்ரே ஃபிரேசர் என்பவரும், மேகனாக பரிசா ஃபிட்ஸ் ஹென்லி நடித்துள்ளனர்.
 - அங்கவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com