360 டிகிரி

உணவுக்கு முன் எலுமிச்சை சாறு பருகி வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி குணமாகும். மேலும், அதை தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலனைத் தரும்.

ஒரு கட்டடம்: 3 கல்லூரிகள்
• கொல்கத்தாவில் "பாலிகஞ்ச் டாக்குரியா' என்ற இடத்தில் ஒரே கட்டடத்தில் 3 கல்லூரிகள் இயங்குகின்றன. 
சிவானந்த சாஸ்திரி என்பவரின் பெயரில் இயங்கும் காலை நேர கல்லூரியில் பெண்கள் மட்டுமே படிக்க முடியும். மதியம் இயங்கும் கல்லூரியின் பெயர் ஹேரம்ப சந்திர கல்லூரி. அதில் ஆண்-பெண் இருபாலரும் பயிலலாம். இரவு நடைபெறும் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே பயில முடியும். அப்போது அதன் பெயர் பிரபுல்ல சந்திர கல்லூரி.
- போளூர் சி.ரகுபதி

• விழிகளைப் பக்கவாட்டில் உருட்டும்போது, மூளையின் வலது, இடது பக்கங்களிடையே தொடர்பு ஏற்படுவதால் நினைவாற்றல் மேம்படுகிறது.
-சரசுவதி

ஒளவையார் கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவிலுள்ள துளசியாபட்டினம் என்ற ஊரில் ஒüவையாருக்கு கோயில் உள்ளது. ஒüவையாரம்மன் என்று வழிபடுகிறார்கள். தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் செய்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. 
- உ.ராமநாதன்

• "கிளாரினெட்' என்னும் மேற்கத்திய இசைக்கருவியை நமது நாதசுரத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தியவர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி.
- பி.புலேந்திரன்

• உணவுக்கு முன் எலுமிச்சை சாறு பருகி வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி குணமாகும். மேலும், அதை தலையில் தேய்த்து வந்தால் நல்ல பலனைத் தரும்.
- நெ.இராமன்

• இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ஞானபீட விருது ஆகும். இந்த விருது முதன்முதலில் 1965-இல் மலையாள எழுத்தாளர் சங்கர குரூப் என்பவருக்கு "ஓடக்குழல்' என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.

• தமிழகத்தில் முதலாவது வானொலி நிலையம் சென்னையில் 1938 ஜூன் 16 அன்று நிறுவப்பெற்றது. நாதசுர வித்துவான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் இசையும், தொடர்ந்து கர்நாடக இசைமேதை டி.கே.பட்டம்மாளின் கச்சேரியும் ஒலிப்பரப்பாயின.
- முக்கிமலை நஞ்சன்

* அதிகமான நினைவுச் சின்னங்களைக் கொண்ட நகரம் புதுதில்லி.

* நேஷனல் ஜியாகரபியின் முதல் இதழ் 1888 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

* உலகிலேயே மிக உயரமான மணிக்கூண்டு மெக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் 600 மீட்டர்.
- குடந்தை பரிபூரணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com