களவாணி மாப்பிள்ளை

அறிமுக இயக்குநர் காந்தி மணிவாசகம். 90-களில் பிரபலமாக இருந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகன்.
களவாணி மாப்பிள்ளை

அறிமுக இயக்குநர் காந்தி மணிவாசகம். 90-களில் பிரபலமாக இருந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகன். இப்போது "களவாணி மாப்பிள்ளை' படத்தின் மூலம் கோடம்பாக்கம் நுழைகிறார். மாப்பிள்ளைக்கும், மாமியாருக்கும் இடையில் நடக்கும் களேபரங்களும், பரபர சம்பவங்களுமான கதை. எதார்த்தமான சினிமா. வாழ்க்கையில் சோதனை வரும் நேரங்களில் சோர்ந்து உடைந்து போய் உட்கார்ந்திடாமல், நினைத்த விஷயங்களை அடைந்தே தீரணும் என்கிற வெறியோடு இந்த இரண்டு பேரும் முட்டி மோதுகிறார்கள். பொள்ளாச்சி நகரப் பின்னணியில் நடக்கிற கதை. இன்றைக்கு வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற பிரச்னைகளை வைத்து சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குநர் காந்தி மணிவாசகம். அட்டக்கத்தி தினேஷ், அதிதி மேனன், தேவயாணி, ஆனந்த்ராஜ் இந்த நான்கு பேரைச் சுற்றி
 நகர்கிறது கதை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com