360 டிகிரி

ஆஸ்துமா , ஈஸ்னோபிலியா நோயுள்ளவர்கள், வில்வ மரத்தின் இலையை மென்று தின்று வந்தால்,  அந்த நோய்கள்  விரைவில்  குணமடையும்.
360 டிகிரி

ஆஸ்துமா , ஈஸ்னோபிலியா நோயுள்ளவர்கள், வில்வ மரத்தின் இலையை மென்று தின்று வந்தால்,  அந்த நோய்கள்  விரைவில்  குணமடையும்.

கஸ்தூரி  கதிர்வேல்

ஈட்டி மரம் எனப்படும் ஒருவகை மரம் தேக்கு மரத்தை விட கடினமானதாகும்.

முக்கிமலை  நஞ்சன்


கனடாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பெரிய  ஏரிகள் உள்ளன. இதனால் கனடாவிற்கு ஏரிகளின் நாடு என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. 

பாதாள சாக்கடை  மூடிகள் வட்டமாக  அமைந்து இருப்பதால்தான், அவை உள்ளே விழுவதில்லை.  இது பொறியியல் ஆராய்ச்சியில்  கண்டு பிடிக்கப்பட்டதாகும்.


உத்ரா ஆனந்த்


வெள்ளை சர்க்கரையை  "அஸ்கா' என்றும் அழைப்பதுண்டு.  இது ஏன் தெரியுமா?   இந்தியாவில் ஒரிசா  மாநிலத்தில்  உள்ள  அஸ்கா என்ற இடத்தில்தான்  முதன்முதலில் சர்க்கரை  தயாரிக்கப்பட்டது. எனவே, முதன்முதலில்  தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயரையே  சர்க்கரைக்கு அப்போது  சூட்டப்பட்டுவிட்டது.

வே.ந.கதிர்வேல்

இந்தியாவின்  எலக்ட்ரானிக் நகரம் - பெங்களூரு.
மலேசியா  நாட்டின் நாணயம் - ரிங்கிட். 
ரொட்டி சோடா  என்பது  சோடியம்  பை கார்பனேட்

எல்.நஞ்சன்

"ஐ.ஆர்- 8',  "ஐ.ஆர்- 20'  என்ற  பெயர்களில்  நெல்வகைகள்  இருப்பது  தெரியும்.  இதில் ஐ.ஆர். என்பதற்கான  விரிவாக்கம்.  ஐசபஉதசஅபஐஞசஅக தஐஇஉ  என்பதாகும்.

கே.கஸ்தூரி 

ரஷியாவில் விஷப் பாம்புகளை பிடிக்க நேர்ந்தால் அதில் இருந்து  உடனடியாக விஷத்தை  எடுத்துவிடுவார்கள்.  பிறகு அந்த பாம்பை பாம்புப் பண்ணைகளில் தொடர்ந்து  பராமரித்து விஷம் எடுப்பார்கள்.  10ஆயிரம்  பாம்புகளில் விஷம் எடுத்தால் ஒரு கிலோ விஷம் கிடைக்கும். இதை மருந்துக்கும் ஆய்வுப்பணிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். 

பொ. பாலாஜி

உலகில்  உள்ள  நாடுகளின்  தேசிய  கீதங்களிலே  கிரீஸ்  நாட்டு தேசிய கீதம்தான் மிக  அதிகமான வரிகளை அதாவது  158 வரிகளைக் கொண்டது.


பி.பரத்


தீராப்பிணி நீங்க,  வைத்தீஸ்வரன்  கோயிலுக்குச் செல்ல வேண்டும். சனி அச்சம் நீங்க, திருநள்ளாறு  கோயிலுக்குச் செல்ல வேண்டும்.  மனநோய் நீங்க, குண சீலத்திற்கும், திருமணம் கை கூட  திருமனஞ்சேரிக்கும், ஊழ்வினை நீங்க, திருவண்ணாமலைக்கும்  சென்று வழிபட வேண்டும்.

நா.கற்பகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com