திருச்சியின் ஹாட்!

வேலைதேடும் இளைஞர்கள், வேலைக்குச்  செல்லும் இளைஞர்கள் அனைவரையும் கட்டி வைத்திருப்பது  சமூக  ஊடக  உலகம் மட்டுமே.  மக்களிடையே  பிரபலமான சமூக ஊடகங்களாக  கூகுள், பேஸ் புக், ட்விட்டர்,
திருச்சியின் ஹாட்!

வேலைதேடும் இளைஞர்கள், வேலைக்குச்  செல்லும் இளைஞர்கள் அனைவரையும் கட்டி வைத்திருப்பது  சமூக  ஊடக  உலகம் மட்டுமே.  மக்களிடையே  பிரபலமான சமூக ஊடகங்களாக  கூகுள், பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூ-டியூப் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.

எந்த ஒரு புதுமையிலும் நாணயத்தின் இருபக்கம் போல நன்மை, தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கும்.  எனவே, சமூக ஊடகங்களில் உள்ளதில்  பால் எது, தண்ணீர் எது என பிரித்து அறியும் அன்னப்பறைவயாக செயல்பட வேண்டும்.

இந்த வகையில் திருச்சியின் அன்னப்பறவையாகவும்,  இன்றைய கணினியுக இளைஞர்களுக்கான வழிகாட்டியாகவும் விளங்குகிறார் திருச்சியைச் சேர்ந்த ஷாபுதீன் குர்ஷி.

பொறியியல் பட்டம் முடித்த 25 வயது இளைஞரான இவர்தான்,  திருச்சி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டத்தின் ஐகானாக விளங்குகிறார்.  எழுத்து, இயக்கம், நடிப்பு என பல்வேறு தளங்களில் தனித்தனியே திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களின் மத்தியில் இவையனைத்தையும் ஒன்றாக கொண்டுள்ளார்.  மினி வீடியோஸ், பிராங்க் ஷோஸ், நாடகம் (drama) ஆகியவற்றை யூடியூப் சேனல் மூலம் விருந்தாக்கி வருகிறார்.

திருச்சியின் சுற்றுலா மையங்கள், ஜல்லிக்கட்டு போராட்டம், திருச்சியின் புராதான சின்னங்கள், மது, புகை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு, சுகாதாரம், மலைக்கோட்டை மாநகரின் வழிகாட்டி பயணம், பாலியல் கல்வி, இளைஞர்களை தொழில்முனைவோராக  மாற்றும் வழிகள், திருச்சியின் கிரிக்கெட், சினிமா, பெண்மையை போற்றும் குறும்படங்கள் என பலவற்றை இயக்கி ஹூயூமன்ஸ் ஆஃப் திருச்சி (Humans of trichy) என்ற தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார். முகநூலிலும் பதிவிடுகிறார். இதற்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். ஏன் mans of trichy என்பதின் முதல் மூன்று எழுத்துக்களை சுருக்கி HOT  trichy என்ற பெயரில் தனது சேனலின் லோகோவை பிரபலபடுத்தி யுள்ளார்.  இது திருச்சியின் ஹாட் (ஏஞப) ஆகவும் ஹார்ட்டாகவும் (Heart)  மாறிவிட்டது.  இந்த ஹாட் இளைஞர்  சொல்வது என்ன? 

பொறியியல் பயின்று வீடியோ தொழில்நுட்பத்துக்கு வந்தது எப்படி?

விஸ்காம் படிக்கவேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாளைய கனவு. குடும்பத்தினரது கட்டாயத்தின் பெயரில் இன்ஜினியரிங் முடித்தேன். பட்டப்படிப்பு முடித்து 2 ஆண்டுகள் கிடைத்த வேலையை செய்து சேமித்த பணத்தில் எனது கனவை நினைவாக்க ஸ்டில் கேமராவும், லேப்டாப்பும் வாங்கினேன். இதுவே எனது தொழிலாகவும், வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.

யூடியூப் சேனல் தொடங்கியது எப்படி?

திருச்சி சினிமா தியேட்டர் ஒன்றில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பியபோது கண்ட காட்சிகளை மீம்ஸ் ஆக தயாரித்து முகநூலில் வெளியிட்டேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து திருச்சி மீம்ஸ் என்ற பெயரில் சமூக தாக்கங்களை அவ்வப்போது மீம்ஸ்களாக வெளியிட்டு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அடுத்தக்கட்டமாக குறும்படங்களை தயாரித்து வெளியிட்டேன். ஆதரவு அதிகரிக்கவே ஹூயூமன்ஸ் ஆப் திருச்சி (ஏன்ம்ஹய்ள் ர்ச் ற்ழ்ண்ஸ்ரீட்ஹ்) என்ற சேனலை தொடங்கினேன். திருச்சியில் உள்ள பிரபலங்களை நேர்காணல் செய்து அவர்களை பற்றி எழுதலாம்னு முடிவு செய்ததில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர், சமூகத்தை பாதிக்கும் இணையத்தில் முக்கிய டிரண்டிங்கான சம்பவங்களுக்கு பொது தலைப்பு கொடுத்து திருச்சி மக்களுடைய கருத்துக்களை (ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ழ்ங்ஸ்ண்ங்ஜ்) கேட்டு வீடியோவாக வெளியிட ஆரம்பிச்சோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறினோம். எனது நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.

எங்களுடைய வீடியோஸýக்கான மூலக்கதையை நண்பன் அமரன் தான் எழுதுகிறான். நாங்கள் இரண்டு பேரும் இணைந்து இயக்கி வெளியிடுகிறோம். அதுமட்டுமின்றி எடிட்டிங், கேமரா என எல்லாமே என்னுடைய பொறுப்பு. 

மிகவும் பாப்புலரான வீடியோக்கள் பற்றி?

ஒரு பொண்ணு பர்சை திருடிட்டு போகிற மினி வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இதனை தனியார் தொலைக்காட்சியில் நேர்காணல் செய்து வெளியிட்டதும் வைரல் மேலும் அதிகரித்தது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com