ஆர்யாவின் மகாமுனி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மகாமுனி'. ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட
ஆர்யாவின் மகாமுனி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மகாமுனி'. ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே "மெளனகுரு' படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.
 படத்துக்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் . எஸ் .தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்ஷன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
 இயக்குநர் பேசும் போது... "க்ரைம் திரில்லர் பாணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் உள்ளிட்ட திரை உலகினர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com