இன்டிவுட் திரைப்பட விழா!

இந்திய அளவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் சினிமா ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்று திகழ்கிறது இன்டிவுட் திரைப்பட விழா. திரைப் பிரபலங்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் உட்பட 500- க்கும்
இன்டிவுட் திரைப்பட விழா!

இந்திய அளவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் சினிமா ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்று திகழ்கிறது இன்டிவுட் திரைப்பட விழா. திரைப் பிரபலங்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் உட்பட 500- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த திரைப்பட விழா, நான்காம் ஆண்டாக ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை ஹைதராபாத்திலுள்ள ஹைடெக்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இந்த விழா நடக்கிறது.
 இது குறித்து இன்டிவுட் திரைப்பட விழாக் குழு தலைவர் சோகன் ராய் பேசும் போது... "இன்டிவுட் சினிமா சந்தை என்பது முழுக்க முழுக்க இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கானது. சினிமாக்கள் திரையிடல், முதலீட்டாளர்கள் சந்திப்பு, சினிமா குறித்த ஆராய்ச்சி மாநாடுகள் மற்றும் பட்டறைகள், ஆலோசனைக் கூட்டங்கள், குழு விவாதங்கள், சிறப்பு திறமை விருதுகள், இன்டிவுட் திறமை வேட்டை, பிரவசி ரத்னா விருதுகள், கோல்டன் பிரேம் விருதுகள் என ஏக நிகழ்ச்சிகள் இதில் நடத்தப்படவுள்ளன. 500-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், 100 }க்கும் அதிகமான பிரதிநிதிகள், 5 ஆயிரம் வர்த்தக பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசு அதிகாரிகள், சுற்றுலா அமைப்புகள், , சினிமா சங்கங்கள், திரைப்பட கல்லூரிகள் மற்றும் பலரும் இதில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். திரையிடல் மட்டுமில்லாமல் நவீன சினிமாவுக்கான கருவிகள் அறிமுகப்படுத்துதல், கண்காட்சி அரங்குகளில் காட்சிக்கு வைத்தல் உள்ளிட்ட பல கட்டங்கள் இருக்கிறது. அங்கு திரையிடப்படும் படங்களும் தேர்வு செய்யப்படும், அந்தப் படத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்படும்'' என்றார் சோகன்ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com