360 டிகிரி

பூண்டை  பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட  மூல நோய் நீங்கும்.
360 டிகிரி

பூண்டை  பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட  மூல நோய் நீங்கும்.

எம். சுகாரா,  தொண்டி

தாவரங்களில் பார்த்தீனியம் செடியும், மரங்களில் யூகலிப்டஸ் மரமும் அதிக சல்பர் - டை- ஆக்சைடை  வெளியிடும். இந்த வேதிப் பொருளானது  மழை மேகங்களை  கலைத்து மழை பெய்யாமல்  தடுத்துவிடும்.  அத்துடன் பக்கத்தில்  எந்த தாவரத்தையும்  வளரவிடாது.  அதிக நீரை உறிஞ்சி  வறட்சியை  ஏற்படுத்தும். 

எஸ். வேல் அரவிந்த், திண்டுக்கல்.

அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம்,  "ஒவ்வோர்  ஆண்டிலும்  பனிக்காலம்,  இலை உதிர்காலம், வசந்த காலம், மழைக்காலம், கோடைக்காலம் என பருவங்கள் உள்ளன இதில் எது மக்களுக்கு  நல்ல காலம்?'  எனக் கேட்டார்.

அதற்கு பீர்பால்,  "அரசே  வயிறு நிறைய  சாப்பிடுபவர்களுக்கு எல்லாக் காலங்களும் நல்ல காலம்தான்.

வறுமையில் வாடுபவர்களுக்கு எல்லாக்  காலங்களும்  கெட்ட காலம்தான்' என்றார்.

பி.பரத்,  சிதம்பரம். 

பிரான்ஸ் நாட்டில், தேர்தல்கள் எப்போதுமே  ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே  நடைபெறும். 

மனித உடலில் மிகவும் குளிர்ச்சியான பாகம்,  மூக்கின் நுனி ஆகும்.  இதன் உஷ்ண நிலை 70 டிகிரி பாரன் ஹீட்டாகும். 

கே. கஸ்தூரி, காட்பாடி. 

நாகேஷ் சொன்னது:

கலகலவென்று சிரித்து வாழுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை காலில் சலங்கை  கட்டாத  நாட்டியமாகிவிடும்.

கைரேகையை நான் நம்புவதில்லை. குரங்குகளின் கையிலும் ரேகை ஓடுகிறது.

தாய்மொழியில்  சிறந்த மொழி ஒன்றுண்டு. அதுதான்  சேய்மொழி - மழலை மொழி.

பெரிய  மனிதர்களிடம்  பழகினால் ரொம்ப ஆபத்து.  பழங்களில் பெரியது பலா,  தொட  முடிகிறதா?, குத்துகிறதே!

நடிப்புக்குப் பள்ளி வேண்டுமா?  வேண்டாம்.  கொஞ்ச நாள் அரசியலில் இருந்தால் போதும். 

- எல்.நஞ்சன், முக்கிமலை.

புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்  தயாரிக்க  பயன்படுவது  கேவ்லார் (KEVLOR) என்ற நைலான்  இழையாகும்.  தயாரிக்கும் கம்பெனி  பெயர் - ட்யூ பாய்ண்ட்  ( DU POINT) ஆகும். 

எஸ்.கே.வி.கந்தன், பெங்களூரு. 

காஞ்சிபுரம் மாவட்டம்  கல்பாக்கத்தைச்  சேர்ந்த அனுபுரத்தில் உள்ள எல்லா குடியிருப்புகள், தெருக்கள் எல்லாம், ராகங்கள், நதிகள்  மலர்கள், பறவைகள் பெயராலே மட்டுமே  இருக்கிறது.  உதாரணத்திற்கு  மோகனம், வைகை, ரோஜா, கிளி என்று உள்ளது.

மேகலா ராஜன்பாபு, அனுபுரம்.

சுதந்திரம் அடைந்த பின் இந்தியா வெளியிட்ட முதல் ஸ்டாம்பின் விலை மூன்றரை  அணா.  ஜெய்ஹிந்த் என்ற  வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப்  1947-ஆம் ஆண்டு  நவம்பர் 21-ஆம் தேதி  வெளியிடப்பட்டது.

ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். 

நிஜமா?

தமிழ்நாட்டில் பதிமூன்று கடலோர மாவட்டங்கள் உள்ளன.  590  கடலோர கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ  1000 கி.மீ. கடலை  எல்லையாகக் கொண்ட மாநிலமாக  தமிழகம் உள்ளது.

எஸ். சடையப்பன், காளனம்பட்டி 


இங்கிலாந்து மன்னராக இருந்த முதலாம் ஜார்ஜ்க்கு  ஆங்கில மொழியே தெரியாது.

பாரசீக நாட்டை  ஆண்ட சைரஸ் என்ற மன்னர்தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்  என்பதையும், ஒரு டஜனுக்கு 12 உருப்படிகள்  என்பதையும் வகுத்தார்.   உலகிலேயே  முதன்முதலாக பேண்ட்  அணிந்த மனிதரும் இவர்தான்.

வே.ந.கதிர்வேல், காட்பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com