நகரும் நொடியில்...

சூப்பர் ஹிட் படங்கள் முதல் சுமார் படங்கள் வரை சினிமாவுக்கு ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களைவிட ஆன்லைனில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில பல கோடிகளைத் தாண்டிக் கொண்டிருக்க
நகரும் நொடியில்...

சூப்பர் ஹிட் படங்கள் முதல் சுமார் படங்கள் வரை சினிமாவுக்கு ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களைவிட ஆன்லைனில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில பல கோடிகளைத் தாண்டிக் கொண்டிருக்க, ஆன்லைனுக்காகவே படம் எடுக்கும் கலாசாரம் தொடங்கிவிட்டது. இந்த வரிசையில் குறும்படங்களும் இடம் பிடித்து வருகின்றன. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜ் ஈஸ்வர் இயக்கியுள்ள படம் "நகரும் நொடியில்'. தென்னிந்திய அளவில் பல விருதுகளை குவித்துள்ள இப்படம், கடந்த 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது, "இதை குறும்படம் என்று சொல்லுவதை விட, பைலட் படம் என்று சொல்லலாம். சுமார் 25 நிமிடங்கள் வரை இது ஓடும். படத்தின் தலைப்புக்கேற்ப இது த்ரில்லர் பாணி படம். ஒரு இரவில் சென்னையில் நடக்கும் கதை. படத்தை பார்த்த விஜய்சேதுபதி, பிரபுதேவா, அசோக் செல்வன், சிபிராஜ், விஜய் ஆண்டனி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு பெரும் உற்சாகம் தந்துள்ளது. ரோகிணி சினிமாஸ் நிறுவனம் இதை தங்களது திரையரங்கில் திரையிட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் இது திரையிடப்படவுள்ளது. விரைவில் இது முழு நீளப் படமாக உருவாகவுள்ளது'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com