இணைய வெளியினிலே!

இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
* 78 வது முறையாக மறுபடியும் லவ் ஃபெயிலியர். 
நமக்கு தெரிஞ்சது தாடி வளர்ப்பு மட்டும்தான்.
எங்கிருந்தாலும் வாழ்க...
ஆனா... எப்ப தோணினாலும் சொல்லி அனுப்பலாம். ஐயாம் வெயிட்டிங்...
- முத்துராமலிங்கம்

* நண்பரே, வணக்கம். 
உங்கள் எதிரிகள் எல்லாம் எனக்கும் எதிரிகள் அல்லர். 
அதேபோல உங்கள் நண்பர்கள் எல்லாரும் எனக்கும் நண்பர்கள் அல்லர். 
நன்றி.
- பவுத்த அய்யனார்

* ஆணைவிட பெண் மேலானவள்
என்பதென் அபிப்ராயம்.
ஆணுக்கு
முகத்திலிருந்து மட்டுமே
வார்த்தைகள் திரளுகின்றன
பெண்ணுக்கோ
பாதங்களிலிருந்தும்...
கொலுசொலிகள்.
- நா.வே.அருள்

* எதைச் சாப்பிடணும்? எதைச் சாப்பிடக் கூடாது? எப்பொழுது சாப்பிடணும்? எப்படி சாப்பிடணும்? என்று உணவு முறையையே ஆரோக்கியத்திற்கான வழிமுறையாகச் சொல்லிக் கொடுப்பது பழைய பாட்டிகாலத்து 
ஃபுட் டெக்னாலஜி... 
என்ன வேணும்னாலும் சாப்பிடலாம். பிரச்னை வந்தா ஸ்டூல் டெஸ்ட், யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட் என்று தின்ன  கழிவுகளைக் கிளறுவது லேட்டஸ்ட் ஹெல்த் டெக்னாலஜி...
200 வருஷமா மெய் ஞானமில்லாத விஞ்ஞானத்தின் பின்னால் ஓடிக் 
கொண்டிருக்கிறோம்.
- இளையரவி தர்மலிங்கம்

* லேப்டாப் பேக் வைத்திருக்கும் 
என்னை "சார்'' என்று 
அழைத்தவருக்குத் தெரியாது...
உள்ளே ரேஷனில் வாங்கிய 
சர்க்கரையும், பருப்பும்தான் இருக்கிறதென்று. 
- நெய்வேலி மணிகண்டன் கிருஷ்ணமுர்த்தி

வலைத்தளத்திலிருந்து...
புத்தக புரமோஷன் ஒரு தனிவேலை. அதற்கு என நேரம் ஒதுக்கி ஒரு மாதமாவது உழைக்க வேண்டும். முதலில் ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
அடுத்து ஒவ்வொருவராய்ப் பார்த்து புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். அதில் உள்ள பெர்சனல் டச் உதவும். கூடுதலாய் அவருடன் புத்தகத்துடன் சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். இதற்கு சமயோஜிதம் முக்கியம். (நானெல்லாம் ஆளைப் பார்த்த குஷியில் போட்டோவை மறந்து விடுவேன்.)
அப்படியே புத்தகத்தை கையெழுத்திட்டுக் கொடுப்பது போல் போட்டோ எடுக்க முடிந்தால் சாலச் சிறந்தது.
நேரில் பார்க்க முடியாவிட்டால் குரியரில் அனுப்பலாம். நூறு புத்தகங்களை அனுப்பும் செலவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
இவ்வளவு புத்தகங்களை அனுப்பினால் போதாது. புத்தகங்கள் போய் சேர்ந்துள்ளனவா? என போன் செய்து உறுதிப் படுத்த வேண்டும். அது மட்டுமல்ல, பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். "படிச்சிட்டீங்களா, அதைப் பற்றி ரெண்டு வரியாவது எழுதுங்களேன்' என நச்சரிக்க வேண்டும். அதற்கும் ஓர் அளவு உண்டு. ஓவராய் நச்சரித்தால் அந்த வெறுப்பில் புத்தகத்தைக் குதறி விடுவார்கள். 

http:thiruttusavi.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com