கல்வி உதவித் தொகை பெற! 

பெற்றோர்  தங்களுடைய வருமானத்தில் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கல்வி உதவித் தொகை பெற! 

பெற்றோர்  தங்களுடைய வருமானத்தில் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.   தங்களுடைய வருவாயிலிருந்து ஈடுகட்ட முடியாதவர்கள் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித் தொகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

கல்வி உதவித் தொகை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  யார் கல்வி உதவித் தொகை வழங்குகிறார்கள் என்பது குறித்து பலரும் அறியாத நிலை தான் உள்ளது.  

இதற்கு உதவும்விதமாக  கல்வி உதவித் தொகை வழங்கும் அமைப்புகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் இணையதளங்கள் உள்ளன. அந்த இணையதளங்கள் வாயிலாக கல்வி உதவித் தொகைகள் பெறும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை குறித்து அறியவும், வெளிநாடுகளால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெறும் வழிமுறைகள் குறித்து அறிய: http: mhrd.gov.inscholarships-education-loan.

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை குறித்து பெறுவது குறித்து அறிய: http:www.momascholarship.gov.in.

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிய: www.vi dyalakshmi.co.in.

மேலும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விவரங்கள் அறிய: 
http:scholarships.gov.in
https:www.scholarshipsinindia.com
http:scholarship-positions.com
http:www.eastchance.com
http:studyabroadfunding.org
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com