வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 83

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது CaptainFlin என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 83

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது CaptainFlin என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கிளி கணேஷிடம், "உனக்கு kiss of death என்றால் என்னவெனத் தெரியுமா?‘' எனக் கேட்கிறது.
Captain Flint: ஒரு விசயத்தால் ஒரு காரியம் கெட்டு குட்டிச்சுவர் ஆகும் என்றால் அதுவே kiss of death.
புரொபஸர்: ரசம்.
Captain Flint: ஆங்...
புரொபஸர்: என் மனைவியின் ரசம். அவள் ரசம் வைத்தே பல வருடங்களாய் என்னை கொன்று கொண்டிருக்கிறாள். That is her kiss of death.
Captain Flint: நீங்க ரசம் வைக்க வேண்டியது தானே?
புரொபஸர்: வைத்து?
Captain Flint: You could give her the kiss of life.
கணேஷ்: இந்த கிளி ரொம்ப விரசமாய் பேசுகிறது அல்லவா சார்?
புரொபஸர்: உனக்கு அதானே வேணும். கேட்டுக்கோ...
கணேஷ்: சேச்சே...
Captain Flint: Kiss of life என்றால் resuscitate or revive someone by blowing into their mouth and pressing their chest.
கணேஷ்: சிங்காரவேலனில் கமல் குஷ்புவுக்கு பண்ணுவது போல...
Captain Flint: Exactly. வாய்க்குள் மூச்சை ஊதி உயிர் கொடுப்பது அவ்வளவு ரொமாண்டிக்கான காரியம் அல்ல. அது ரொம்ப சிரமம்.
புரொபஸர்: இந்த resuscitate என்ற சொல், இத்தாலிய மொழியில் இருந்து 16ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்துக்கு வந்தது. இதன் இத்தாலிய மூலச்சொல்லின் பொருள் மீண்டும் எழ வைப்பது.
கணேஷ்: எவ்வளவு எளிமையா கேட்டவுடனே புரியும்படியா இருக்குது இல்ல. மயக்கத்தில இருக்கிற யாரையும் எழ வைச்சா அது resuscitate தானா?
புரொபஸர்: தூக்கத்தில இருக்கிறவங்களை எழுப்பினா அது இல்ல. உடல் நலக்கேட்டால் மயக்கம் போட்டவங்களை எழ வைப்பது மட்டுமே resuscitate. அதே
போல வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை எழுச்சி கொள்ள வைப்பதையும் இதே சொல்லால் Note ban by the ruling central government was supposed to resuscitate the ailing economy.
கணேஷ்: முத்தமிட்டால் எப்படி மரணம் வரும்?  
Captain Flint: ஆமாம் கரெக்ட். நீ ஒரு சந்தேக சாம்பிராணி. கேள்விகளை ரெடியாக வைத்திருக்கிறாயே. சரி உனக்கு விடை தெரியுமா?
கணேஷ்: ம்...ஹும்...
Captain Flint: பண்டைய காலங்களில் முத்தம் என்பது இன்று போல காதலுடன் சம்பந்தப்பட்டது அல்ல.
கணேஷ்: பிறகு?
Captain Flint: அன்று பல சமூகங்களில் முத்தமே இன்று போல் இல்லை. ஆனால் இரண்டு பேர் சந்திக்கும் போது மூக்கை மூக்கை உரசிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. அதே போல் கையை முத்தமிடுவதும் இருந்தது. இது மரியாதையும் அன்பையும் தெரிவிக்கும் ஒரு முறையாக இருந்தது. அதே போல வணிக
பரிவர்த்தனைகளின் போது ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்காகவும் முத்தம் பயன்பட்டது. 
கணேஷ்: அதாவது அக்ரிமெண்ட் போடுவது போல முத்தம் இடுவார்களா?
Captain Flint: ஆமா. அதனால் தான் முத்தம் என்பது சமூக உறவுகளை சுட்டும் விசயமாக இருந்தது. ஒரு மனிதனின் விதியை தீர்மானிக்கும் காரியமாக முத்தம் பார்க்கப்பட்டது. யூதாஸின் முத்தம் பற்றி தெரியும்... இல்லையா?
கணேஷ்: யூதாஸ் ஒரு துரோகி, ஏசுவை காட்டிக் கொடுத்தார் எனத் தெரியும்.
Captain Flint: ஆமாம். யூதாஸ் ஏசுவை காட்டிக் கொடுத்தது எப்படி? கூட்டத்தினர் நடுவே இது தான் ஏசு என எதிரிகளுக்கு அடையாளம் காட்டுவதற்காக அவர் ஏசுவை முத்தமிட்டார். அன்று அப்படியான வழக்கம் இருந்தது. அன்று முத்தத்தின் பொருளே வேறு. அப்படித் தான் Judas kiss என்ற இடியம் உருவானது.
அதாவது பாசாங்கான அன்பை Judas kiss என்பார்கள். பின்பு இதே நெகட்டிவ் பொருளில் முத்தம் பற்றி பல சொலவடைகள் தோன்றின.
கணேஷ்: என்னென்ன?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com