3 டி ஓவியங்களை வரைய புதிய மென்பொருள்!

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தில் இருந்த சில அப்ளிகேஷன்கள் நீக்கப்பட்டும், சில அப்ளிகேஷன்கள் சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடன் புதிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் சமீபத்தில் வெளிவந்தது
3 டி ஓவியங்களை வரைய புதிய மென்பொருள்!

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தில் இருந்த சில அப்ளிகேஷன்கள் நீக்கப்பட்டும், சில அப்ளிகேஷன்கள் சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடன் புதிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் சமீபத்தில் வெளிவந்தது.  இந்த விண்டோஸ் 10 இயங்குதளத்தில் நீக்கப்பட்ட அப்ளிகேஷன்களில் ஒன்றுதான் அனைவருக்கும் பரீட்சயமான பெயின்ட் பிரஷ் என்ற பெயின்ட் அப்ளிகேஷன் ஆகும். 

கணினி உபயோகிப்பாளர்கள் அனைவரும் எளிதாக ஓவியம் வரைய முதன் முதலில் உபயோகப்படுத்திய மென்பொருள் என்றால் அது பெயின்ட் பிரஷ்தான். ஏனென்றால் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. 

தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமானது பல மாற்றங்களுடன் வெளி வந்துள்ளது. ஆனால் அதில் இந்த பெயின்ட் மென்பொருள் இல்லாததைக் கண்ட பயனாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். பெயின்ட் மென்பொருள் இனி வெளிவராது என்ற செய்தி வெளிவந்தது. இதனால் பலர் தங்களுடைய உள்ளக்குமுறலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்த வண்ணம் இருந்தனர். 

இதை கண்ட மைக்ரோசாஃப்ட் நிர்வாகத்தினர், "பல்வேறு மாற்றங்களுடன் விரைவில் வெளியிடப்படும்'' என்று தங்கள் வலைப்பக்கத்தில் தெரிவித்தனர்.

தற்பொழுது "பெயின்ட் 3டி' என்ற புதிய பெயருடன் செயலி வடிவில் வெளியிட்டுள்ளனர். இது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும்.   இந்த இயங்குதளத்தில் உள்ள பயனாளர்கள் விண்டோஸ்-இன் வலைத்தளத்திற்குச் சென்று "பெயின்ட் 3டி' செயலியை இலவசமாக  டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்த செயலியானது Windows Settings>Apps>Default apps>paint3d - இல் காணப்படும். இது தற்போது செயலி வடிவில் வந்துள்ளதால் புதிதாக அப்டேட்களை செய்துகொள்ள வசதியாக இருக்கும். 

பழைய பெயின்ட் பிரஷ் போன்றே பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதே நேரத்தில் அதிகபடியான சிறப்பு அம்சங்களுடனும் வெளிவந்துள்ளது இந்த "பெயின்ட் 3டி'.  இதில் பல்வேறு வகையான பிரஷ்கள் முன்பை விட அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளன. 

இதன் முக்கியமான சிறப்பு அம்சம் 3டி ஆகும். இதில் எளிதாக 3டி ஒவியங்கள் வரையலாம். போட்டோஷாப்-இல் இருப்பது போன்று இதிலும் எளிதாகப் படங்களைச் செலக்ட் செய்து கட் செய்துகொள்ளலாம். படங்களுக்கு விதவிதமான கலர் அடிப்பது, படங்களைத்  தாங்கள் விரும்பும் வகையில் மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களை மிகவும் எளிதாகச் செய்ய இந்த செயலி உதவும். சாதாரண 2 டி படங்கள் மட்டுமே வரையும் தளமாக இருந்த இந்த பெயின்ட்,  தற்போது கூடுதலாக 3டி தொழில்நூட்பத்துடன் வெளிவந்திருப்பது பயனாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com