ஐந்து முக்கிய துறைகள்!

வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ள 5 முக்கிய துறைகள் என பெட்ரோலியம் என்ஜினியரிங்,
ஐந்து முக்கிய துறைகள்!

வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ள 5 முக்கிய துறைகள் என;பெட்ரோலியம் என்ஜினியரிங், ஏரோ ஸ்பேஸ் அன்ட் ஏரோநாட்டிகல் என்ஜினியங், மேனேஜ்மென்ட் ஆஃப் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட், கெமிக்கல் என்ஜினியரிங் ஆகியவற்றைச் சொல்லலாம்.

பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், அதனுடைய பொருட்களுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. ;அதனால் அந்த நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்புகள் ;அதிகம். ;அதனால் பெட்ரோலியம் என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது.;

ஏரோ ஸ்பேஸ் அன்ட் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் துறையானது விமானம், ஹெலிகாப்டர் தயாரித்தல், செயற்கை கோள் மற்றும் ஏவுகணை உருவாக்குதல் சம்பந்தமான படிப்பாகும். விமானப் ;போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ; ; ; நாட்டின் பாதுகாப்புக்கும், விண்வெளி தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் செயற்கைகோள், ஏவுகணைத் ;தயாரிப்பு மிகவும் அவசியமாகின்றது. ; அதனால் இத்துறை சம்பந்தமான படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாத ஒரு துறை. தகவல் தொழில் நுட்பத் துறையின் தொழில் நுட்பங்களை மேலாண்மை செய்வதற்கான படிப்பு மேனேஜ்மென்ட் ஆப் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் துறையாகும்.

எந்த பொருளையும் உற்பத்தி செய்து, சந்தைப்படுத்திவிட்டால் மட்டும் போதாது. ;அந்த பொருட்களை உற்பத்தி செய்த இடத்திலிருந்து சேமிப்பு கிடங்கு, முகவர்கள் மற்றும் நுகர்வோருக்குக் கிடைக்கும் வகையில் அதனை அவர்களுடைய இடத்திற்கு எடுத்துச் சென்று சேர்ப்பது லாஜிஸ்டிக் துறையின் வேலையாகும். ; ;அதனால் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம்.

கெமிக்கல் என்ஜினியரிங் ;முக்கிய துறையாகும். ;ஏனெனில் தற்போதைய கால சூழ்நிலையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களும் ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படுவதில்லை. ;அந்த அளவுக்கு ரசாயனங்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாகியுள்ளது. ;அதனால் அது சம்பந்தமான கெமிக்கல் என்ஜினியரிங் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவை தான் அந்த 5 முக்கிய துறைகள். அவை சம்பந்தமான படிப்புகளை தேர்வு செய்து படித்து அதில் அனுபவத்தையும் பெற்றால் அவர்களுக்கு நல்ல எதிர்காலமும், வேலை வாய்ப்பும், நல்ல வருவாயும் காத்திருக்கின்றது.
- எம்.அருண்குமார்


;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com