நர்சிங் சிறப்பு படிப்புகள்!

செவிலியர்களாக பணிபுரிவதற்கு அது சம்பந்தமான நர்சிங் படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
நர்சிங் சிறப்பு படிப்புகள்!

செவிலியர்களாக பணிபுரிவதற்கு அது சம்பந்தமான நர்சிங் படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.  அதிலும் குறிப்பாக மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு சிறப்பு பிரிவுகளில் பணிபுரிவதற்கு சிறப்பு நர்சிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன.  அத்தகைய சிறப்பு நர்சிங் படிப்புகளை படித்தால் மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

டிப்ளமோ இன் நர்சிங், பி.எஸ்சி நர்சிங், எம்.எஸ்சி நர்சிங் இதுமாதிரியான  நர்சிங் படிப்புகளை தான் நமக்குத் தெரிந்திருக்கும்.  அதையும் தாண்டி பல்வேறு சிறப்பு பிரிவுகளும் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக, 
Cardiothoracic Nursing
Diploma in Operating Operatin Room (OR) Nursing
Orthopedic and rehabilitation nursing
Critical Care Nursing
Acute Complex Care Nursing
Palliative Care Nursing
Coronary Care Nursing  
Nursing Leadership & Management
Health and Rehabilitation Nursing
Nursing Education
இத்தகைய குறிப்பிட்ட சிறப்பு நர்சிங் படிப்புகள் எந்தெந்த கல்வி நிறுவங்களில் நடத்தப்படுகின்றன என்பதைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.  இந்தியன் நர்சிங் கவுன்சில் இணைய தளத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன.  அதனால் குறிப்பிட்ட சிறப்புப் பிரிவை தேர்வு செய்து அது சம்பந்தமான நர்சிங் படிப்பைப் படித்தால் மருத்துவத்துறையின் சிறப்பு பிரிவுகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.  
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com