நாடி வரும் நாடகம் தொடர்புடைய படிப்புகள்!

இன்றைய திரைப்படங்களுக்கு அடிப்படையாக இருந்தவை  நாடகங்கள் தாம். முதலில் தோன்றியது நாடகக் கலை தான்.
நாடி வரும் நாடகம் தொடர்புடைய படிப்புகள்!

இன்றைய திரைப்படங்களுக்கு அடிப்படையாக இருந்தவை  நாடகங்கள் தாம். முதலில் தோன்றியது நாடகக் கலை தான்.  அதனால் நாடகங்களுக்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் திரைப்படங்களைக் காட்டிலும் நாடகங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக நாடகங்கள் இருந்தாலும், சமூக சீர்த்திருத்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தவை நாடகங்கள் தாம்.  இந்திய விடுதலை போராட்ட வேள்வியை மக்கள் மனதில் வித்திட்டதற்கு நாடகங்கள் முக்கிய காரணமாக திகழ்ந்தன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் நாடகங்களுக்கு வரவேற்பு இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நாடகங்கள் சம்பந்தமான படிப்புகளை பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.   நாடகத்தில் ஆர்வமுடையவர்கள் அந்தப் படிப்புகளில் ஏதோ ஒன்றைப் படித்து, நாடகத்துறையில் ஈடுபட்டு பணம் மட்டுமல்ல,  புகழையும் சம்பாதிக்கலாம்.

நாடகம் தொடர்புடைய படிப்புகள் குறித்த தகவல்களை அறிய :
http://www.tamiluniversity.ac.in/english/faculty/department-of-drama/
http://thedramaschoolmumbai.in/
http://indiantheatre.puchd.ac.in/
http://www.unipune.ac.in/dept/fine_arts/centre_for_performing_arts/default.htm
http://www.jmctsr.org/SOD/ 
-எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com