விலங்குகள் பேசுவதைத்  தெரிந்து கொள்ள உதவும் கருவி!

உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் பேசிவிடலாம்.
விலங்குகள் பேசுவதைத்  தெரிந்து கொள்ள உதவும் கருவி!

உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் பேசிவிடலாம். ஆனால் நம்முடனிருக்கும்  செல்ல பிராணிகளுடன் நாம் பேச முடியாது. அவற்றின்  தேவைகளைத் தெரிந்து கொள்ளவும் முடியாது.  

விலங்குகளின் அசைவு,  அவை எழுப்பும் ஒலி ஆகியவற்றை  வைத்து அவை என்ன சொல்ல வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும்  அறிவியல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  இதன் மூலம்  வரும் ஆண்டுகளில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளிடம்  நாம் பேச முடியும்.

விலங்குகள் எழுப்பும் ஒலியை  அடிப்படையாக வைத்து அவை என்ன கூற விரும்புகின்றன என்பதை  மொழிபெயர்க்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். 

இதற்காக கடந்த 30 ஆண்டுகளாக நாய்களின் மொழியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார், அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சுலோபோட்சிக்காஃப்.

வட அமெரிக்காவில் உள்ள  நாய்களின் மொழியை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தின் செயலாக்கத்தை இவர் கண்டுபிடித்துள்ளார்.

நிறைய சென்சார்கள் பொருத்தப்பட்ட சேணத்தை நாயின் உடலில் கட்டி வைத்துவிட்டால்,   அது நாயின் அசைவு, அதன் குரலொலி ஆகியவற்றைக் கண்டறிந்து, மொழிபெயர்த்து நமக்கு ஸ்பீக்கரின் மூலமாகத்  தெரிவித்துவிடும்.

நாயுடன் நாம் பேசினால் அந்த ஒலியை சேணத்துக்குள் உள்ள சென்சார் உள்வாங்கி, அதிர்வுகளை ஏற்படுத்தி நாம் என்ன தெரிவிக்க விரும்புகிறோம் என்பதை நாய்க்கு உணர்த்திவிடும். 

சாதாரணமாக நாய் வாலாட்டினால் என்ன சொல்கிறது... உறுமினால் என்ன சொல்கிறது... குரைத்தால் என்ன சொல்கிறது என்று எல்லாருக்கும் தெரியும்.  இதையே இன்னும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தியிருக்கிறார்கள். 
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com