நாசாவுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்த  9 வயது சிறுவன்!

எதற்கும் வயது தடையில்லை என்பதை அமெரிக்காவின் 9 வயது சிறுவன் நிரூபித்துள்ளான்.
நாசாவுக்கு வேலை கேட்டு விண்ணப்பித்த  9 வயது சிறுவன்!

எதற்கும் வயது தடையில்லை என்பதை அமெரிக்காவின் 9 வயது சிறுவன் நிரூபித்துள்ளான். சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் எப்படியாவது பணியாற்ற வேண்டும் என்று அடுக்கடுக்காக பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் பலர் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டுள்ளனர்.

அப்படிப்பட்ட நாசா, மாதம் சுமார் ரூ.1 கோடி சம்பளத்துடன் கூடிய பணிக்கு வெளியிட்டிருந்த வேலை வாய்ப்பு விளம்பரத்துக்கு அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் விண்ணப்பித்துள்ளான். அதற்காக அவன் செய்த காரியம் என்ன தெரியுமா? 

கூர்மையான பென்சிலைக் கொண்டு அவன் கைப்பட விண்ணப்ப கடிதத்தை எழுதியுள்ளான். அதில், "என் பெயர் ஜாக் டேவிஸ். புதிய கிரகங்களைப் பாதுகாக்கும் அதிகாரி பணிக்காக நான் விண்ணப்பிக்கிறேன். என்னுடைய வயது 9ஆக இருக்கலாம். ஆனால், இந்தப் பணிக்கு நான் தகுதியானவன் என்று நினைக்கிறேன். நான் வேற்று கிரக வாசி என்று எனது தங்கை கூறுவாள். அதுமட்டுமின்றி,  விண்வெளி தொடர்பான அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் கண்டு வருகிறேன். விண்வெளியை மையமாகக் கொண்ட "மென் இன் பிளாக்' என்ற  ஹாலிவுட் திரைப்படத்தை மட்டும் நான் இன்னும் பார்க்கவில்லை. வீடியோ கேம்களையும் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். சிறுவன் என்பதால் வேற்றுகிரக வாசியைப்போல் விரைவில் அனைத்தையும் கற்றுக் கொள்வேன்' என்று தெரிவித்திருந்தான்.

வெகுளியாகவும், விச்சித்திரமாகவும் இருந்த இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட நாசா, சிறுவன் ஜாக் டேவிஸýக்கு பதில் கடிதத்தை அனுப்பியது மட்டுமின்றி, அவரது முயற்சிக்கு தொலைபேசி மூலம் பாராட்டுகளையும் தெரிவித்தது.

நாசாவின் இயக்குநர் ஜேம்ஸ் எல், கிரீன் அனுப்பிய பதில் கடிதத்தில், "நம்முடைய விண்வெளி வீரர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு கிருமிகள் கொண்டுவருவதில் இருந்து பாதுகாக்கவும், பிற கிரகங்களுக்கு பூமியில் இருந்து செல்லும் கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பாதுகாக்கவும் இந்தப் புதிய பணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ளதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தி சிறப்பாக படித்தால் வருங்காலத்தில் நாசாவில் பணியாற்றலாம். விண்வெளியின் அடுத்த தலைமுறையை உருவாக்க சிறுவர்களுக்கு நாசா பயிற்சிகளையும் அளித்து வருகிறது'  என்று   தெரிவித்துள்ளார்.
- அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com