பப்ளிக் பாலிசி படிப்புகள்!

அரசுத் துறைகள் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை வகுக்கின்றன.  
பப்ளிக் பாலிசி படிப்புகள்!

அரசுத் துறைகள் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை வகுக்கின்றன.  

அவ்வாறான கொள்கைகள் பப்ளிக் பாலிசி என அழைக்கப்படுகின்றது.  அந்த கொள்கைகள் வகுப்பதற்கு அரசு உயரதிகாரிகள் அரசுக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குவார்கள்.  அதே சமயம் சம்பந்தப்பட்ட துறையில் நிபுணராக விளங்கும் தனிப்பட்ட நபர்களிடமிருந்து அரசு துறையினர் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிவார்கள்.  அதன் மூலம் மக்களுக்கு பயன்படும் திட்டங்களுக்கான நல்ல பொது கொள்கைகளை வகுக்க முடியும்.  அத்தகைய அரசு கொள்கைகள் மூலம் மக்களுக்கு பயனுள்ள நல்ல பல திட்டங்கள் சென்றடையும்.    திட்டங்கள் மட்டுமல்லாது, அரசு துறைகள் சிறப்பாக செயல்படுவதற்கும் பல்வேறு கொள்கைகள் அரசால் வகுக்கப்படுகின்றன.

அதற்கும் அரசு துறை அலுவலர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் கலந்தாலோசனை செய்வது நடைமுறை வழக்கமாகும்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த பொது கொள்கைகள் சம்பந்தமான  பட்டப் படிப்புகளும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் இந்தியாவில் நடத்தப்படுகின்றன.
பப்ளிக் பாலிசி படிப்புகள் :
Management Programme in Public Policy (MPPP) 
M.A. (Public Policy and Sustainable Development)
Post Graduate Programme in Public Policy Management (PGP}PPM)
Master's Programme in Public Policy 
Post Graduate Programme in Public Policy & Management
பப்ளிக் பாலிசி படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள்:
1. THE INDIAN SCHOOL OF BUSINESS (ISB) 
2. TERI University   
3.  Management Development Institute (MDI)  
4.  Indian Institute of Management 
Bangalore  
5.  National Law School of India University  
6.  Indira Gandhi National Open University} IGNOU
7.  Jindal School of Government and 
Public Policy
8.  Mahatma Jyoti Rao Phoole University
9.  O. P. Jindal Global University
10. RNB Global University
11. St. Xavier's College Mumbai
13. University of Madras
-எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com