வாங்க இங்கிலீஷ் பேசலாம் 116

Arrive மற்றும் reach ஆகிய சொற்களுக்கான வித்தியாசங்களைப் பற்றி மீனாட்சி கணேஷுக்கு விளக்குகிறார்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 116

Arrive மற்றும் reach ஆகிய சொற்களுக்கான வித்தியாசங்களைப் பற்றி மீனாட்சி கணேஷுக்கு விளக்குகிறார்.
கணேஷ்: மேடம், கிரிக்கெட் வர்ணனையில் ஒரு பந்து எல்லைக்கோட்டைத் தொட்டால் the ball reaches the boundary rope என்று சொல்வார்கள். ஆனால் arrives என்று சொல்ல மாட்டாங்க.
மீனாட்சி: கரெக்ட் கணேஷ். நல்ல observation. நீ சொன்ன கிரிக்கெட் வர்ணனைக்கே வரேன். பந்து பேட்ஸ்மேன் கிரீஸுக்கு வந்து சேர்வதை he batsman arrived at the crease என்று சொல்வார்கள். Reached என சொல்லமாட்டார்கள். அதே போல the ball arrives at him faster than he expects. ஆனால் விக்கெட் கீப்பரிடம் பந்து செல்வதை reach என சொல்வார்கள். The pitch had low bounce, and so most balls when they 
reached the keeper at below knee height. 
கணேஷ்: ஏன் அந்த வித்தியாசம்?
மீனாட்சி: ஒரு பேட்ஸ்மேன் கிரீஸுக்கு வருவது முன்கூட்டி முடிவான ஒன்று. அதனால் arrived என்கிறார்கள். பவுலர் பந்தை வீசும் போது அது பேட்ஸ்மேனை நோக்கியே செல்ல வேண்டும் என்பது விதிமுறை.
கணேஷ்: இல்லாவிட்டால்?
மீனாட்சி: இல்லாவிட்டால் அது wide ஆகி விடும். சரி, நான் சொன்னது தானே பேட்ஸ்மேன் கிரீஸுக்கு வருவதும், பந்து அவனை நோக்கி வருவதும் முன்கூட்டி முடிவானது என்பது arrive. ஆனால் பேட்ஸ்மேன் அடிக்கிற ஒரு பந்து பவுண்டரிக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லையே? அது பீல்டரிடமும் செல்லலாம். இப்படி நிச்சயமின்மை உள்ளதால் ball reached the boundary rope என்கிறோம். இதையே கீப்பருக்கு பந்து செல்வதையும் சொல்லலாம். அடிக்கப்படும் பந்து கீப்பரிடம் தான் செல்ல வேண்டும் என்றில்லையே. ஆகையால் the ball reached the keeper. சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு சொற்களுக்கும் ஓர் எளிமையான, நேரடியான வித்தியாசம் உள்ளதே, அது என்ன?
கணேஷ் (தலையை சொறிகிறான்): தெரியலியே மேடம்
மீனாட்சி: At. Arrive at என்று சொல்வோம். He arrived at Chennai airport. He arrived Chennai airport என்றால் தப்பு. அதே நேரம் reachக்கு at தேவையில்லை. We reached the airport on time. We reached at என்று சொல்ல மாட்டோம்.
கணேஷ்: மேடம் ஏன் we arrived at Chennai airport on timeன்னு சொல்லக் கூடாதா?
மீனாட்சி: இல்லை. ஏனென்றால் நீ டிராபிக்கில் லேட் ஆகி போய் சேருவோமா மாட்டோமா என்கிற தவிப்பில் வண்டி ஓட்டி ஏர்போர்ட் போய் சேர்கிறாய். அதனால் reach. ஆனால் நீ ஒரு pickup vanஇல் ஏர்போர்ட் செல்கிறாய். சரியான நேரத்தில் கிளம்பி சரியான நேரத்தில் எந்த தடங்கலோ சுணக்கமோ இன்றி போய் சேர்ந்து விடுகிறாய். அப்போது அது ஒரு திட்டமிட்ட பயணம் என்பதால் arrived என்று சொல்லலாம். Our pickup van arrived at the airport on time.
கணேஷ்: ஆஹா... எவ்வளவு நுட்பமான வேறுபாடுகள்.
(மீனாட்சி தலையாட்டியபடி பார்சலைத் திறந்து ஹேர் ஆயிலை எடுத்து திறந்து அதில் இருந்து கொஞ்சம் எண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்து கூந்தலில் தடவுகிறார். அபாரமான வாசனை பரவுகிறது.
புரொபஸர் லேசாய் மோப்பம் பிடித்தபடி அங்கு வருகிறார்.)
மீனாட்சி: நம்ம ஜூலி சிக்கன் குழம்பு வாசனையை மோப்பம் பிடிச்சு வர மாதிரியே வர்றீங்களே
புரொபஸர்: சும்மா தூக்குது. ஒரு ஹனிமூன் பீலிங் வருதே
மீனாட்சி: வரும் வரும். சரி போன காரியம் என்னாச்சு? கண்டுபிடிச்சீங்களா?
புரொபஸர்: ஓ யெஸ். Arrive என்கிற வார்த்தையோட மூலச்சொல் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை படிச்சேன்.
கணேஷ் (ஆர்வமாய்) : சொல்லுங்க சார்
புரொபஸர்: Arrive என்பது adrip எனும் லத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இச்சொல்லுக்கு நதிக்கரை என அர்த்தம். 
கணேஷ்: படகில் ஆட்கள் வந்திறங்குவதை குறித்த சொல்லா சார்?
புரொபஸர்: கரெக்ட். இந்த ad rip என்பது வினைச்சொல் ஆன போது கரையை அடைதல் என அர்த்தம் வந்தது. ஏனென்றால் அக்காலத்தில் படகிலும் கப்பலிலுமாய் தான் நெடுந்தூரப் பயணங்கள் சாத்தியப்பட்டன. இப்போதுள்ள ரயில், பேருந்து, விமான சேவைகள் அப்போது இல்லையே. ஆக ஒருவர் படகில் இருந்து வந்திறங்குகிறார் என்றாலே அவர் வந்து சேர்ந்து விட்டார் எனும் அர்த்தம் உருவானது. 
கணேஷ்: ஆனால் ad ripக்கும் arriveக்கும் சம்பந்தமே இல்லையே சார்?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com