உலகெங்கும் உள்ள மாற்று மருத்துவம்! 

உலகம் முழுவதும் மாற்று மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
உலகெங்கும் உள்ள மாற்று மருத்துவம்! 

உலகம் முழுவதும் மாற்று மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஓமியோபதி மருத்துவம் பக்கவிளைவற்றதும், சிக்கனமானதுமான மருத்துவமாகும். இம் மருத்துவம் ஜெர்மனி நாட்டில் உருவாகி உலகம் முழுவதும் பரவியுள்ளது. அலோபதி மருத்துவத்திற்கு அடுத்தபடியாக ஓமியோபதி மருத்துவத்தை மக்கள் நாடி வருகிறார்கள்.
ஓமியோபதி மருத்துவத்துறையில் நீண்டநாள் நோய்களுக்கு நிரந்தர தீர்வு என மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தில் ஓமியோபதி தனியார் மருத்துவக்கல்லூரிகள் பத்து உள்ளன.அதில் அரசு கல்லூரி ஒன்றும் உள்ளது.
"இந்த படிப்பு ஐந்தரை ஆண்டு படிப்பாகும். இதில் நான்கரை ஆண்டு படிப்பும், ஓர் ஆண்டு மருத்துவமனையில் பயிற்சியும் அளிக்கப்படும். பிளஸ் டூவில் பயாலஜி, பிசிக்ஸ், கெமிஸ்ட்டிரி ஆகிய பாடங்களில் 50 சததிற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் இந்த படிப்பில் சேர்வதற்கு தகுதியானவர்கள். 2018ஆம் ஆண்டு முதல் நீட்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான பாடத்திட்டத்தினை மத்திய ஓம்யோபதி கவுன்சில் வழங்கி வருகிறது.
ஒமியோபதி மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள், தாவரங்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
இந்த படிப்பில் எம்.பி.பி.எஸ். படிப்பில் உள்ள பாடங்களே பெரும்பாலும் இருக்கும். மருந்துகள் மாத்திரம் மாறும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்குறியியல், ஓமியோபதி மருந்துகளின் அடிப்படை தத்துவங்கள், ஓமியோபதி குறித்த தத்துவங்கள் மருந்தியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். பின்னர் மனிதன் விஷம் அருந்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது போன்றவையும், பிரேத பரிசோதனைப் பயிற்சியும் அளிக்கப்படும். மனிதனுக்கு என்ன நோய் வந்தால் உடல் எவ்வாறு பாதிக்கிறது எனவும், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன எனவும் பாடமும், பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தொடந்து அறுவைசிகிச்சை, மகப்பேறியல் உள்ளிட்ட பாடங்களும் நடத்தப்படும். தொற்றுநோய்கள் குறித்த ஆய்வு, அதற்கான தீர்வு, புதிய மருந்துகள் குறித்த ஆய்வு,நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஓமியோபதி மருத்துவமனைகளில் ஓர் ஆண்டு பயிற்சி பெற வேண்டும். 
இறுதியில் புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நோயின் தாக்கத்தை குறைக்கும் மருந்து கண் டுபிடித்து , அதனை நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்து, பரிசோதனைகளின் முடிவை அறிந்து திட்ட அறிக்கை தயாரித்து, கருத்தரங்கங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஓமியோபதி மருத்துவப்பிரிவு உள்ளது.
சில தாலுகா மருத்துவமனைகளிலும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதில் படித்தவர்கள் தனியே மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இந்த மருத்துவத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் உள்ளன.
- எஸ்.பாலசுந்தரராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com