வேலை...வேலை...வேலை...

தென்னக ரயில்வேயில் வேலை, நோய்தடுப்பு மையத்தில் வேலை, தமிழக அரசில் மருத்து ஆய்வாளர், மருந்து வேதியியலாளர் வேலை
வேலை...வேலை...வேலை...

தென்னக ரயில்வேயில் வேலை
பதவி: சீனியர் கிளார்க் 
காலியிடங்கள்: 1
பதவி: கிளார்க் கம் டைப்பிஸ்ட்
காலியிடங்கள்: 7
பதவி: ஹெல்பர்.
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி, பணி அனுபவம் மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளபடி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 
 Deputy Chief Personnel Officer
Office of the Chief Administrative Officer,
Southern Railway, Construction,
Egmore, Chennai - 600 008
மேலும் விவரங்களுக்கு: 
ttp://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1510309591377-NOTIFICATION-10112017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15-12-2017.

நோய்தடுப்பு மையத்தில் வேலை 
பணி: Upper Division Clerk 
காலியிடங்கள்: 2 
வயதுவரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300-ஐ
"The Director, National Institute of Epidemiology’ என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது IPO-வாக எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: The Director- in- charge, National Institute of Epidemiology, Second Main Road, Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai 
- 600 077. 
மேலும் விவரங்களுக்கு: http://nie.gov.in/images/careers/Advertisement_UDC_-Website_Nov.2017_74.PDF என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.12.2017

தமிழக அரசில் மருத்து ஆய்வாளர், மருந்து வேதியியலாளர் வேலை
பணி: Junior Analyst
காலியிடங்கள்: 14
கல்வித் தகுதி: பார்மஸியில் பட்டம் அல்லது Analytical Chemistry- ஐ ஒரு பாடமாக எடுத்து வேதியியல் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம்.
பணி: Junior Chemist
காலியிடங்கள்: 6 
கல்வித் தகுதி: வேதியியலில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது இந்திய மருந்தக நிறுவனத்தால் அளிக்கப்பட்ட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chemist 
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி: வேதியியல்/ வேதியியல் தொழில்நுட்பம்/தொழிலக வேதியியலில் எம்.எஸ்சி பட்டம் மற்றும் 
குறைந்தது இரண்டாண்டுகள் பணி அனுபவம்.
பணி: Archeological Chemist 
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: எம்.எஸ்சி வேதியியல் பட்டம்.
வயது வரம்பு: எஸ்.சி/எஸ்.டி., பி.சி., எம்பிசி, ஓபிசி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், ஆதரவற்ற விதவைகள், பட்டியலிடப்படாத பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. மற்றவர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www. 
tnpscexams.net, www.tnpscexams.net ஆகிய இணைய தளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வுக் கட்டணம்: ரூ.150 (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா/ இந்தியன் வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்).
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_28_not_junior_analyst_chemist.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20-12-2017.

தமிழக அரசில் நூலகர் வேலை
பதவி: கல்லூரி நூலகர்
காலியிடங்கள்: 21
கல்வித் தகுதி: நூலக அறிவியல்/ தகவல் அறிவியல்/ டாக்குமென்டேஷன் அறிவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டத்தில் 55% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் தேசிய தகுதிகாண் தேர்வு/ மாநில தகுதிகாண் தேர்வுகளில் நூலக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மாவட்ட நூலக அதிகாரி
காலியிடங்கள்: 9
கல்வித் தகுதி: எம்.ஏ./எம்.எஸ்சி/நூலக அறிவியலில் முதுகலை பட்டம் மற்றும் ஏதாவது ஒரு நூலகத்தில் குறைந்து மூன்று ஆண்டுகள் அனுபவம்.
பதவி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உதவி நூலகர் மற்றும் தகவல் தொடர்பு அலுவலர்
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் அல்லது நூலக அறிவியல்/ நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டம்.
வயது வரம்பு: எஸ்.சி/எஸ்.டி., பி.சி., எம்பிசி, ஓபிசி, ஆதரவற்ற விதவைகள், பட்டியலிடப்படாத பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. மற்றவர்களுக்கு கல்லூரி நூலகர்/ மாவட்ட நூலகர் பதவிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பதவிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வுக் கட்டணம்: ரூ.200 (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா/ இந்தியன் வங்கி) மூலமாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_27_LIBRARIAN_NOTIFICATION.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20-12-2017.
தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com