போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு...!

எத்தனையோ இளைஞர்கள் போட்டித் தேர்வில் பங்கு பெறவது எப்படி? யாரிடம் கேட்பது? எங்கு சென்று தயார் செய்வது? எந்தெந்த புத்தகங்களைப் படிப்பது?  என்பன போன்ற விவரங்கள் தெரியாமல் கவலைப்படுவார்கள்.
போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு...!

எத்தனையோ இளைஞர்கள் போட்டித் தேர்வில் பங்கு பெறவது எப்படி? யாரிடம் கேட்பது? எங்கு சென்று தயார் செய்வது? எந்தெந்த புத்தகங்களைப் படிப்பது?  என்பன போன்ற விவரங்கள் தெரியாமல் கவலைப்படுவார்கள்.

இத்தகைய விவரங்களை தெரிந்து கொள்ள முடியாத பலர், தேர்வுக்கு சரியாக தயார் செய்யாமல் பெயருக்கு எழுதிவிட்டு வருவர். இந்த பிரச்னைகளைத் தீர்த்து போட்டித் தேர்வுக்கு இளைஞர்களைத் தயார் செய்ய ஒரு தளம் ஏராளமான தகவல்களுடன் காத்திருக்கிறது. அதில் UPSC (combined defence service), IES ExAM, IBPS PO, UGC-NET, IPS, RBI, MPSC, SBI, SSC என எண்ணற்ற அரசு சார்ந்த அமைப்புகளின், நிறுவனங்களின் போட்டித் தேர்வுக்குரிய அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த தளத்தின் முதல் பக்கத்திற்குச் சென்றால் அங்கு அனைத்து நிறுவனங்களின் லோகோவும் இடம் பெற்றிருக்கும். அதில் நமக்குத் தேவையான லோகோவை கிளிக் செய்து அது தொடர்பான விவரங்கள் முழுவதையும் பார்க்க முடியும். உதாரணமாக SBI என்ற ஐகானை கிளிக் செய்தால் அந்த வங்கித் தேர்வு தொடர்பான விவரங்கள், அதாவது எப்போது தேர்வு, அதை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது நடைபெறும்? தேர்வு முடிவு எப்போது வரும் என்பன போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ள பக்கம் வரும். 

மேலும், தேர்வு செய்யும் முறை, மதிப்பெண் பங்கீடு உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
விவரங்களுக்கு இணைய தள முகவரி: http:upscfever.comupsc-feverindex.html
- வி.குமாரமுருகன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com