வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 75

புரொபஸர் மற்றும் கணேஷ் ஒரு மாலைப் பொழுதில் ஐயப்பன் கோயிலுக்குப் புறப்படுகிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 75

புரொபஸர் மற்றும் கணேஷ் ஒரு மாலைப் பொழுதில் ஐயப்பன் கோயிலுக்குப் புறப்படுகிறார்கள். கோயிலை நோக்கி செல்லும் தெரு ஒன்றில் ஒரு சாமி படங்கள் விற்கும் கடைக்குச் சென்று பார்க்கிறார்கள். அப்போது அவர்களிடம் கடையின் உரிமையாளர் வருகிறார். அவருக்கு ஒரு கால் ஊனம். ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடக்கிறார். செம்பட்டை நிறம் அடித்த தாடி வைத்திருக்கிறார். கண்ணில் கறுப்புக்கண்ணாடி.

கடையின் உரிமையாளர்: Hi guys, can I be of assistance?
கணேஷ் அவரை மேலும் கீழுமாய் நோக்கி: உங்களுக்கே assistance வேணும் போல் இருக்கே?
கடையின் உரிமையாளர்: No I am my own man.
கணேஷ்: அப்படீன்னா?
புரொபஸர்: அது ஒரு idiomatic expression. அவர் சுயசார்பு கொண்டவர் self-dependent என்று அர்த்தம்.
கடையின் உரிமையாளர்: No I prefer the term fiercely independent. I am fiercely independent. 
கணேஷ்: self-dependentக்கும் independentக்கும் என்ன சார் வித்தியாசம்?
புரொபஸர்: ஒருத்தர் self-dependent என்றால் அவர் யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தன் கையே தனக்கு உதவின்னு இருப்பார். Independent அதை விட நேர்மறையான ஒரு சொல். சுதந்திரமானவர் என்று அர்த்தம்.
கணேஷ்: அப்படீன்னா அடுத்தவர் உதவியைப் பெறுவது அடிமைத்தனமா?
கடையின் உரிமையாளர்: Ha... ha...  I like this young man.
புரொபஸர்: அது ஒருத்தரோட ஈகோவைப் பொறுத்தது. உனக்கு ஈகோ அதிகமுன்னா அடுத்தவர்களுடைய உதவி உன் சுதந்திரத்தைப் பறிக்குமுன்னு நினைப்பே.
கடையின் உரிமையாளர்: I am sorry. Please let us agree to disagree here.
கணேஷ்: அதென்ன agree to disagree? I disagree, நான் மாறுபடுகிறேன்னு சொன்னா போதாதா?
கடையின் உரிமையாளர்: Not necessarily. There is a difference. A big difference.
புரொபஸர்: ஆமா. இப்போ ரெண்டு பேர் ஒரு விசயத்தைப் பற்றி சர்ச்சை செய்கிறார்கள். அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியல.
கணேஷ்: உதாரணமா?
கடையின் உரிமையாளர்: தம்பி நான் உன்கிட்ட ரெண்டு பழம் வாங்கி வர சொன்னேனா? ஆமா. அதில ஒண்ணு இங்கிருக்கு. இன்னொண்ணு எங்கே? அந்த மாதிரி...
கணேஷ்: ஹா... ஹா... அது சூப்பர்.
புரொபஸர்: சரி, அந்த மாதிரி ரெண்டு பேரும் தத்தமது தரப்பில் விட்டுக் கொடுக்காம பேசுறாங்க. கடைசியில் மண்டையைப் பிச்சுக்காம இருக்க, நீ சொல்றது உனக்குச் சரி, நான் சொல்றது எனக்குச் சரி என்று சொல்லி கைகுலுக்கி பிரியுறாங்க. அப்போ பயன்படுத்துறது தான் lets agree to disagree. அதாவது கருத்துமாறுபாடு கொண்டாலும் சுமூகமாகப் பிரிவோம் என்று சொல்வது. கடைசியா, முத்தாய்ப்பா இன்னொண்ணு சொல்றேன், I am my own man என்கிற idiom ரொம்ப பழசு. கி.பி.1380 வாக்கில் சாஸர் என்பவர் பயன்படுத்தினது. இன்னும் புழக்கத்தில் இருக்குது.
கடையின் உரிமையாளர்: Yeah I know. From Troilus and Criseyde. I am my own woman, well at ease...
புரொபஸர்: Very impressive. எப்படி இதெல்லாம் படிச்சீங்க? 
கடையின் உரிமையாளர்: நானா படிச்சேன்? By the by I own this shop.
புரொபஸர்: ஹலோ... என் பேரு புரொபஸர். உங்களுக்கு ஜெப்ரி சாஸர் தெரியும் என்கிறது ஆச்சரியமா இருக்கு.
கடையின் உரிமையாளர்: யெஸ். எனக்கு அந்த முழு வசனமும் நினைவு இருக்கு. I am my own woman, well at ease  thank God for that  concerning my estate, I am free to graze wherever I may please.
புரொபஸர்: No husband now can say to me, checkmate.
கடையின் உரிமையாளர்: அது எனக்கு ரொம்ப பிடிச்ச வரி. திருமணம் என்பது ஒரு செஸ் விளையாட்டு என்கிற சித்திரம் உடனே வருகிறது.
கணேஷ்: Checkmateன்னா என்ன?
புரொபஸர்: செஸ்ஸில் ஒரு வியூகம் மூலமா எதிராளி தோல்வியில் இருந்து தப்பிக்க முடியாதபடி டிபாப் பண்ணினா checkmateன்னு சொல்வோம்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com