இணைய வெளியினிலே!

இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை 
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
* நிறைய பொறுமையைக் கொடு ஆண்டவா...
அதிமேதாவிகள் நிறையப் பேர் சுத்துறாங்க...
- வீரவேல் மணிவண்ணன்

* புகைவண்டியில் 
கை அசைக்கிறது 
குழந்தை.
என் நாளின் 
மேல் விழுகிறது...
சொர்க்கத்திலிருந்து
ஒரு பூ.

* வாக்கியம் போல் 
கடந்து போகும்
ரயிலை 
ஒருமுறையாவது
படித்திருக்கிறீர்களா?
- ராஜா சந்திரசேகர்

* வாழ்க்கையில இருக்கிற  ஸ்பீட் பிரேக்கரை உடைத்து சாதனை படைக்க 
வெறி கொண்டு கிளம்பினா...  ஒவ்வொரு  ஸ்பீட் பிரேக்கர்லயும் 
ஒரு பொண்ண   நிறுத்துறாரு கடவுள்...

* இன்றைய காதல் 
செல்போன் நம்பரை
வாங்குவதில் தொடங்கி,
சிம்மை மாற்றுவதில் 
முடிந்துவிடுகிறது. 
- நாஞ்சில் தமிழன்

* எதுவுமே 
செய்யவில்லையென்றால் 
முட்டாள் என்பார்கள்...
எதாவது 
வித்தியாசமாக செய்தால் 
இது தேறாது என்பார்கள்...
அவர்களை 
விட்டுத் தள்ளுங்கள்...
அது அவர்களுக்கு அவமானம். 
நீங்கள் செய்ய நினைத்ததைச் 
செய்து கொண்டே இருங்கள். 
அது உங்களுக்கு வெகுமானம். 
- மதுரக்காரன் கார்த்திகேயன் 

* இதையெல்லாம் இனிமேல்
இப்படிப் பார்த்தால் தான்...
உண்டு போலும்.
- நெப்போலியன் செல்வராஜ்

* அறிவுரை, புத்திமதி என்றொரு 
கூர்வாள் குத்தி கிழிக்காமல், 
அக்கறையோடும், அனுசரனையோடும்
கவலைகளைக் கடந்துபோகவே
மனித மனம் ஆசைப்படுகிறது.
சில வாஞ்சையை எதிர் நோக்கி... 
- ஷோபனாதேவி முத்துசாமி

வலைத்தளத்திலிருந்து...
இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை 
க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி... ம்...கூம். ஈரோடு முழுக்கவே வித
விதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக் கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இர் விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசி வரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்... உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது, நளன் என்றொரு உணவகம். ஏதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளைத் தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என் போன்ற நோஞ்சான்கள் மீதெறிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம்
http:balasee.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com