சுய தொழில் தொடங்க விருப்பமா?

சுய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறது எம்.எஸ்.எம்.இ. பெரும்பாலான இளைஞர்கள் மாத ஊதியத்தில் வேலை செய்வதையே விரும்புகின்றனர்.
சுய தொழில் தொடங்க விருப்பமா?

சுய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறது எம்.எஸ்.எம்.இ. பெரும்பாலான இளைஞர்கள் மாத ஊதியத்தில் வேலை செய்வதையே விரும்புகின்றனர்.

அது தனியார் நிறுவனமோ அல்லது அரசுத்துறையோ. எத்துறை என்றாலும் நிம்மதியாக வேலை செய்து மாத சம்பளத்தை பெற வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் மனநிலையாக இருக்கிறது.

இருப்பினும், எப்படியாவது சொந்தமாகத் தொழில் தொடங்கி நாம் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக உயர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி நினைக்கும் இளைஞர்களுக்கு பல்வேறு வகையில் வழிகாட்டி வருகிறது எம்.எஸ்.எம்.இ. சுய தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கும்,  ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது மத்திய அரசின் Ministry of Micro, Small & Medium Enterprises (M/o MSME) என்ற நிறுவனம்.

மத்திய அரசின் விதிகளின்படி தகுதியுள்ளவர்கள் இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும். தமிழகத்தில் கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. 

மேலும் விபரங்களுக்கு: msme.gov.in இணையதளத்தைப் பார்வையிடலாம்.
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com