பழுது நீக்க பயிற்சி!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  
பழுது நீக்க பயிற்சி!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, நான்கு சக்கர வாகனங்களையும் அதிக அளவுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.   உலக நாடுகளிலேயே மிகப்பெரிய துறையாக இருப்பது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு துறையாகும்.  2015 - 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் 23.96 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன.

இத்தகைய சூழ்நிலையில் நாடு முழுவதும் வாகன பழுதுகளை நீக்கவும், சர்வீஸ் செய்து தரவும் போதுமான மெக்கானிக்குகள் இல்லை.  வாகனங்களின் விற்பனை செய்யும் நிறுவனங்களுடைய சர்வீஸ் மையத்திற்கு சென்றுதான் பழுதை நீக்க வேண்டியிருக்கிறது.  

இத்தகைய சூழ்நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  மிகப்பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனியாக  சர்வீஸ் மையம் துவங்கினாலும் சரி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய துறையாகும்.  அதனால் அத்துறையில் வேலை வாய்ப்புப் பெற ஆட்டோமொபைல் பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும்.  வேலையில்லா இளைஞர்கள் இத்துறையைத் தேர்வு செய்வது நல்லது.  ஏனெனில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  

ஆட்டோமொபைல் பயிற்சி வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  இப்பயிற்சி பெற விரும்புபவர்கள் அந்த நிறுவனங்களை அணுகி தகவல் பெறலாம்.

பயிற்சி வழங்கும் சில நிறுவனங்கள்:
Automotive Research Association of India - https:araiindia.com
SGS INDIA - http:www.sgsgroup.in
Toyota india - http:www.toyotabharat.com / toyota-in-india / ttep
YAMAHA TECHNICAL ACADEMY - http:www.yamaha-motor-india.comservice-training.html
Auto institute  - http:www.autoinstitute.co.in
MMM Training Solutions  - http:www.mmmts.com / training-for-automotive.htm

- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com