வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 70

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம் ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 70

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம் ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள். அவர் LOL எனும் ஒரு acronym பற்றி சொல்கிறார். LOL என்றால் laugh out loud என்பதன் சுருக்கம். இதை இணைய அரட்டைகளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் LOLஐ வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டும் சிலர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், ரெபக்கா என்று ஒரு பெண் பத்திரிகையாளருக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பும் போதெல்லாம் LOL என்று முடிப்பார். ஆனால் அவரது குறுஞ்செய்தி ரொம்ப சீரியஸாக இருக்கும். ரெபக்காவுக்கு ஒரே குழப்பம். அப்புறம் என்ன நடந்தது? கேட்போம்:

முதியவர்: ரெபக்கா ஒருநாள் கேமரூனை நேரில் சந்தித்து கேட்டே விட்டார். ஏன் இப்படி ஒவ்வொரு முறையும் LOL போட்டு முடிக்கிறீர்கள்? கேமரூன் அப்பிராணியாய் சொன்னார்: LOL என்றால் lots of love. இது உங்களுக்கு தெரியுமுன்னு நெனச்சேன். ரெபக்கா அவருக்கு விளக்கினார்: அந்த அர்த்தத்தில் யாருமே கஞக பயன்படுத்துறதில்ல. அதன் மீனிங் laughing out loud. கேமரூனுக்கு லஜ்ஜையாகி விட்டது. ஹி... ஹி...
ஜூலி: செம.
முதியவர்: என்ன சொன்ன?
ஜூலி: செம. இது இளைஞர்களின் lingua franca. இன்னிக்கு புயல் அடிச்சாலும், வெள்ளம் வந்தாலும் பசங்க சொல்ற ஒரே வார்த்தை "செம'
முதியவர்: அப்படீன்னா என்ன அர்த்தம்? 
ஜுலி: யாருக்கு தெரியும்? செம இல்ல.
புரொபஸர்: இதுக்கு சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு awesome. பசங்க இப்போ எல்லாத்துக்கும் awesome சொல்றாங்க. How are you என்று கேட்டால் Fine, good சொல்ல வேண்டிய இடங்களில் இப்போது awesome broன்னு சொல்றாங்க.
கணேஷ்: அதென்ன சார் புரோ?
புரொபஸர்: அது brother என்பதோட சுருக்கப்பட்ட வடிவம்.
கணேஷ்: ஏன் ஒரு நண்பனைப் போய் broன்னு கூப்பிடணும்? நண்பன் என்ன சகோதரனா?
ஜூலி: சரி, நீ உன் பிரண்டை மச்சான்னு கூப்பிடறதில்ல?
கணேஷ்: ஆமா.
ஜூலி: அவன் என்ன உன் தங்கச்சி புருசனா?
கணேஷ்: அப்படி இல்ல. இது வேற மச்சான். இது மச்சி...
முதியவர்: அது மட்டுமில்ல. Bro என்கிறதுக்கு பின்னாடி நாம எதிர்பார்க்காத ஒரு வரலாறு இருக்குது.
கணேஷ்: அதென்ன சார்?
முதியவர்: ஆரம்பத்தில் இந்த சொல்லை அதிகமா பயன்படுத்தியவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த கறுப்பர்கள். எழுபதுகளில் bro என்றாலே கறுப்பர் என்ற அர்த்தம் விளங்கியது.
கணேஷ்: ஆனால் இப்போ BMWவில் வந்து இறங்கிற சிவப்பான பசங்க  broன்னு அழைக்கிறாங்களே?
முதியவர்: ஆமா. தொண்ணூறுகளில் தான் இந்த அர்த்தத்தில் bro புழங்க ஆரம்பிச்சுது. கறுப்பர் என்ற அர்த்தத்தில் இருந்து ஓர் ஆண் நண்பன் என்ற அர்த்தத்துக்கு மாறியது.
கணேஷ்: boyfriend
முதியவர்: அது தான் இல்ல. ஒரு பெண்ணோட காதலன் boyfriend. ஓர் ஆணோட ஆண் நண்பன் bro.
கணேஷ்: அப்படீன்னா ஒரு பெண்ணோட ஆண் நண்பன்?
முதியவர்: male friendன்னு சொல்லலாம். 
கணேஷ்: அப்படீன்னா lover?
முதியவர்: எவ்வளவு கேள்விடா கேட்பே?
கணேஷ்: சாரி.
புரொபஸர்: Lover என்றால் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்ந்து தாம்பத்யம் நடத்தும் ஆண். அதாவது ஒரு பெண் ஓர் ஆணுடன் ஆழமான உறவு இல்லாமல் சுற்றினால் அவன் boyfriend. ஆனால் பரஸ்பரம் எல்லாம் பகிரும் அளவுக்கு அந்த உறவு வளர்ந்தால் அவன் lover. போதுமா?
முதியவர்: Bro என்பது ஒரு neologism. Neologism என்றால் புதுசாக பேச்சுவழக்கில் தோன்றும் சொற்கள். Bro என்றால் பார்ட்டிகளில் கலந்து சதா கொண்டாட்டமாய் வாழும் இளைஞன் என்ற அர்த்தம் ரெண்டாயிரத்தில் ஏற்பட்டது. இந்த இளைஞர்களுக்கு இடையிலான நட்பை குறிக்கும் சொல்லாக bro மாறியது. இன்று வாழ்க்கையை ஜாலியாய் மட்டும் எடுக்கும் ஓர் இளைஞனை bro என்கிறார்கள். தன்னைப் போல் மற்றொரு உல்லாசப் பிறவியை காணும் போது அணைத்து bro என அவன் அழைக்கிறான்.
கணேஷ்: ஒரு பத்திரிகையில் படிச்சேன். காதல் தேசம், ஓகே ஓகே எல்லாம் bromance படங்கள் என்று படிச்சேன். அப்படீன்னா என்ன?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com