இணைய வெளியினிலே...

இருப்பதே தெரியாது என்று அறியும்போது?மீதியுள்ள புள்ளி புள்ளி புள்ளி ஒரு சதவீதத்திலும்
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* கொஞ்சம் இடைவெளி விட்டுத் 
தொடருங்கள்...
வாகனங்களை
மட்டுமல்ல,
உறவுகளையும்.
நீடிக்க வேண்டுமெனில்
சிறு இடைவெளி அவசியம்...! 
****
* ஆசையைக் கட்டுப்படுத்த 
புத்தனாகப் 
பிறக்கத் தேவையில்லை...
நடுத்தர குடும்பத்தில்
ஆணாகப்  பிறத்தலே 
போதுமானதாகிறது.
- ராஜா முகமது

* சிகரத்தின் நுனியைத் தொட்டு
 முடிவை எட்டுவதைக் காட்டிலும்... 
பரந்த சமவெளியில்
அதிசய ஆச்சரியங்களை எதிர்கொள்ளலாம்.
- ஜனனி மானஸா

• வலையில் வீழ்த்துவதென்பது 
ஒரு தனிக் கலை.
அதற்கு மிக சாமர்த்தியம் வேண்டும்...
எந்தச் சாமர்த்தியமும் தேவையில்லை
வலையில் வீழ்வதற்கு. 
- கணேச குமாரன்

• அடிப்பதான பாவனை போதுமெனக்கு.
பெருங்கற்களை எறியாதே.
- யாழினி முனுசாமி

• அடிமைச்சங்கிலியை
உடைத்தெறிந்த  பின் தான்...
இரும்புக்கூண்டிற்குள்
இருப்பது தெரிந்தது..
- பூங்காற்று ரவி

• என்னதான் அதிர்ஷ்டமாக இருந்தாலும்...
தொடர்ந்து வந்தால்...
 எல்லாத்தையும் பயன்படுத்த முடியாது!
- வெ. பூபதி

• நீரற்ற தனிமையைத் தாங்கவே முடியவில்லை...
படித்துறைகளால்!
- நேசமிகு ராஜகுமாரன்

• பேட்டரி இல்லா 
செல்போன்கள்,
அமெரிக்க ஆய்வாளர்கள்
அசத்தல்...
அட...  சீக்கிரம் 
கொண்டு வாங்கப்பா...
சார்ஜ் போட்டு மாளல...
- கொடைக்கானல் சந்திர சேகரன்

வலைத்தளத்திலிருந்து...
உங்களுக்கு அச்சமாக இல்லையா...
உலகத்தில் 99.9999 சதவீத பேருக்கு
நீங்கள் என்ற ஒருவர்
உலகில்
இருப்பதே தெரியாது என்று அறியும்போது?
மீதியுள்ள புள்ளி புள்ளி புள்ளி ஒரு சதவீதத்திலும்
99.9999 விழுக்காட்டிற்கு  
உங்கள் இருப்பும் இல்லாமையும்
பொருட்டில்லை  என்று தெரியும்போது?
எஞ்சியுள்ள  புள்ளி புள்ளி ஒன்றிலும்
பாதி பேர்கள்
நீங்கள் இருப்பதைவிட
இல்லாது போவதையே விரும்புகிறார்கள்
என்று உணரும்போது...
உங்களுக்கு அச்சமாக இல்லையா...?
http://ezhuththuppizhai.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com