வாங்க இங்கிலீஷ் பேசலாம் 96: ஆர்.அபிலாஷ்

Captain Flint எனும் கிளி escape  எனும் சொல் ஆங்கிலத்தில் தோன்றியதன் பின்னுள்ள கதையை கணேஷிடம் கூறுகிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 96: ஆர்.அபிலாஷ்

Captain Flint எனும் கிளி escape  எனும் சொல் ஆங்கிலத்தில் தோன்றியதன் பின்னுள்ள கதையை கணேஷிடம் கூறுகிறது.
Captain Flint:  Ex + cappa என்பது தான் escape என்பதன் லத்தீன் வேர்ச்சொற்கள்.  Ex என்றால் "வெளியேறிய' என அர்த்தம்.  உதாரணமாய்,  ex - cop என்றால்
வேலையில் இருந்து "வெளியேறிய", ஓய்வு பெற்ற போலீஸ்காரர். Cappe என்றால் cape. பாரம்பரியமாய் ஐரோப்பியர் அணியும் கையற்ற ஒரு நீள் அங்கி.
யாரையாவது துரத்தி வரும் போது பின்னால் இருந்து இந்த அங்கியை பிடித்துக் கொள்கிறார்கள். அப்போது பிடிபடுகிறவன் அங்கியை கழற்றி கொடுத்து விட்டு
ஓடுகிறான். அங்கி மட்டும் கையில். ஆனால் ஆள் தப்பித்து விடுகிறான். அங்கியில் இருந்து வெளியேறுவது என்பது தான் escape என்பதன் ஆரம்பப் பொருளாக இருந்திருக்கிறது.
கணேஷ்: அட 
Captain Flint:  ஆமா. (புரொபஸரை நோக்கி):  என்ன சார் இன்னும் ஜூஸ் குடிச்சு முடிக்கலியா?
புரொபஸர்:  மரண தாகம் இன்னிக்கு.  Excessive thirst. A thirst I can't quench. I am running low on water.
Captain Flint:  ஹலோ...  ஹலோ...  ரிலாக்ஸ்
 புரொபஸர் (ஜூஸ் குடிக்கிறார்): ஏன் திடீர்னு மேஜர் சுந்தர்ராஜன் போல பேசுறேன்?  
Captain Flint:  If you are dehydrated. ஏதாவது டயபடீஸô இருந்து தொலைக்க போகுது...
புரொபஸர்:  செக் பண்ணிட்டேன். இதுவரைக்கும் இல்ல. 
கணேஷ்:  சார் dehydrate என்றால் நா வறட்சி தானே?
புரொபஸர்:  இல்ல. உடம்பில் நீர்ச்சத்து குறைவது. அப்போது உடனே நீர் அருந்தி நீர்ச்சத்தை ஏற்றினால் you rehydrate. இது ஒரு டெக்னிக்கலான சொல்.
விளையாட்டின் போது களைப்பைப் போக்கி தண்ணீர் குடித்தால் rehydrating என்பார்கள்.
கணேஷ்: அதென்ன running low?  ஓடுவது சம்பந்தப்பட்டதா?
புரொபஸர்:  ஏதாவது ஒரு விசயம் காலியாகப் போகுதுன்னா running low. வண்டியில பெட்ரோல் காலியாகப் போகுதுன்னா the bike is running low on gas.
வீட்டில கோதுமை மாவு காலியாகப் போகுதுன்னா we are running low on wheat flour at home.
கணேஷ்: சார் அது ஏன் சிலர் மட்டும் கேஸ்ஸுன்னு சொல்றாங்க, வேறு சிலர் பெட்ரோலுங்கிறாங்க? கொழப்புறாங்களே!
புரொபஸர்: அமெரிக்க ஆங்கிலத்தில் பெட்ரோலை கேஸும்பாங்க.  நம்ம ஊரில் அமெரிக்காவைப் பின்பற்றுகிறவர்கள் கேஸ் என்பார்கள்.  பிரிட்டீஷ்காரங்க petrol
என்பார்கள். நாம் ஒரு முன்னாள் பிரிட்டீஷ் காலனி என்பதால் அதிகமான பேர் பிரிட்டீஷ் இங்கிலீஷ் பேசுறோம். அதனால் பெட்ரோல் என்கிறோம்.
Captain Flint: ஆக்சுவலி, அமெரிக்கக்காரங்க தான் சரியா பயன்படுத்தறாங்க.  Petrol என்றால் பெட்ரோலியம் என்பதன் சுருக்க வடிவம். பெட்ரோலியம் என்றால்
சுத்திகரிக்கப்படாத பெட்ரோல். ஆனால் gasoline என்றால் வண்டியில் பயன்படுத்தத்தக்க வகையில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல். அதன் சுருக்க வடிவம் தான் gas. ஆகையால் gas தான் சரியான சொல்.
புரொபஸர்:  ரெண்டுமே சரி தான்.
கணேஷ்: ரெண்டு பேரும் அடிச்சுக்காதீங்க. ஆனால் கேஸ் தீந்து போச்சுன்னா உடனே ஞாபகம் வருவது சமையல் கேஸ் தான். ஏன்னா இது இந்தியா?
Captain Flint: என்ன ஜூஸ் குடிக்கிறீங்க புரொபஸர்?
புரொபஸர்:  Strawberry juice
Captain Flint:  Strawberry  ஜூஸை ஸ்டிரா போட்டு குடிக்கிறீங்க. ஆனால் ஸ்டிராபெரிக்கு உள்ளேயே  ஸ்டிரா இருக்குது தெரியுமா?
புரொபஸர்:  என்ன குழப்பறே?
Captain Flint: குழப்பல. ஸ்டிராபெரி என்பது ஒரு aggregate fruit. அதாவது தொகுப்புப் பழம்.  அதற்கு வெளியே விதை விதையா இருப்பது போல் தோற்றம்
இருக்குமே?
புரொபஸர்: ஆமா. 
Captain Flint:  அது விதையில்ல.  Achene. அதாவது சூல் பை. அதுக்கு உள்ளாடி தான் விதை இருக்கும். இப்படி தனித்தனியா விதை கொண்ட சூல்
பைகளுடைய தொகுப்பு தான் ஸ்டிராபெரி. இந்த சூல் பைகள் பருத்து பழுத்து ஒரு பழமா கனியுது.
புரொபஸர்: ஆனா அதை ஏன் ஸ்டிரான்னு சொல்றாங்க?
Captain Flint: ஒவ்வொரு சூல் பையும் ஒரு ஸ்டிரா போல செயல்படுவதால் அந்த பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு தரப்பினர் straw என்ற
வினைச்சொல் strew எனும் பழைய சொல்லில் இருந்து வந்திருக்கலாம். Strew என்றால் பரவிக் கிடப்பது. ஸ்டிராபெரி புல்வெளியில் காய்த்து பரவிக் கிடப்பதால்
strewberry என சொல்லப்பட்டு இது பின்னர் strawberry என மருவியிருக்கலாம் என்கிறார்கள்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com