இணைய வெளியினிலே...

நாம் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டே அடுத்ததைத் தேடுவதற்கு முயல்வோம்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* நான் இப்படி இருப்பதால் என்னை பிடிக்கவில்லை என்றால் ...
"உங்களுக்கு பிடிக்காத 
ஒருவனாகவே வாழ்ந்து 
விடுகிறேன்'
விட்டு விலகி விடுங்கள் ..
- சின்னு கணேஷ் 

* உணர்ச்சிவயப்பட்ட 
உரையாடல்களை விட ...
அறிவுப்பூர்வமான
செயல்பாடுகளே
இப்போதைய தேவை.
- ரங்க ராஜ்

* பலமுறை ஜெயித்தவன்
ஒருமுறை தோற்றால்
அது விசித்திரம்,
பல முறை தோற்றவன்
ஒருமுறை ஜெயித்தால்,
அது சரித்திரம்
- வேல்ஸ் வேல்ஸ்

* பக்தியைப் "பயபக்தி'  என்று 
ஏன் சொல்கிறார்கள்?
பக்தி அன்புமயமாக இருக்காதா?
- களந்தை பீர் முகம்மது

* சில புத்தகங்கள் படபடக்கும் மனதை
பேப்பர் வெயிட்டாய் நிலைப்படுத்துகின்றன.
சில புத்தகங்கள் மனதுக்குச்
சிறகுகள் அளித்துப்  பறக்க வைக்கின்றன...
- பெ. கருணாகரன்

* பங்களா நாய்களுக்கு வீடே உலகம்.
தெரு நாய்களுக்கு உலகமே வீடு.
- பொய்யாமொழி அண்ணாமலை

* "சடச் சட'  என்ற சத்தம் கேட்டு வெளியே வருவதற்குள்
 நனைகிற ஆசையை உலர்த்திவிட்டுப் போயிருந்தது மழை.
* * *
சொல்லியாகிவிட்டது அநேகமாக
எல்லோரிடமும்...
யாரிடமும் சொல்ல வேண்டாமென்று.
- இரா எட்வின்

வலைத்தளத்திலிருந்து...
நாம் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டே அடுத்ததைத் தேடுவதற்கு முயல்வோம். இது மூதாதைக்கு முன்னவரான குரங்கிலிருந்து கற்று வந்த பாடம்.  "ஒரு கிளையை கெட்டியாகப் பற்றிய பின்னரே,  அடுத்த கிளையைப் பிடிக்க முயல வேண்டும், அந்தரத்தில் ஆடுவது ஆபத்து' - இவை குரங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் உள்ளிருக்கும் சிந்தனை.  இது ஒரு பாதுகாப்பான சிந்தனை தான். 
உற்றுப்பார்த்தால் பாதுகாப்பு என நினைப்பதை,  உரித்துப் பார்த்தால் எல்லாமே சுயநலன் பேணி மட்டுமே என்பது தெரிய வரும்.  சுயநலம்தான் சுகம்.  சுயநலம் பேணுவதே பாதுகாப்பு.  ஆனாலும் ஏன் சுயநலனை சுயநலத்துடன் செயல்படுபவர்கள் கூட  அங்கீகரிப்பதில்லை?  சுயநலம் என்பதே  ஒரு  கெட்ட வார்த்தை என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு விட்டதால், சுயநலமில்லாத உறவுகள் உண்டா?
பொதுநலனுக்காகப் பாடுபடும்போதும், உள்ளே அந்தச் "சுயத்திற்கு' ஒரு நிறைவும், நிம்மதியும்,  சிலநேரங்களில் திமிரும் வருகிறதே, அது இல்லாமல் எந்தச் செயலும் சாத்தியமில்லை. மூச்சு விடுவது கூட ஒரு சுயநலம் தான். முரண்பட்டு நிற்பதும் சுயநலம்தான். 
http://rudhrantamil.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com