டிப்ளமோ முதல் எம்.டெக் வரை பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள்!

பெயிண்ட் குறித்த அடிப்படை அனைத்தையும் கற்றுத்தருவது பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள்.  ஆட்டோ மொபைல்,
டிப்ளமோ முதல் எம்.டெக் வரை பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள்!

பெயிண்ட் குறித்த அடிப்படை அனைத்தையும் கற்றுத்தருவது பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள்.  ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் ஆகிய இரு முக்கிய துறைகளை பெயிண்ட் தொழில் சார்ந்துள்ளது.  பெயிண்டுகள் இவ்விரண்டு துறைகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.    வாகனங்கள், கட்டடங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.  அதனால் பெயிண்ட் தொழில் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.  குறிப்பாக பெயிண்ட் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு பெயிண்ட் தொழிற்சாலைகளில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தரக் கட்டுப்பாடு, உற்பத்தி, சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப உதவி, ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.  பெயிண்ட் டெக்னாலஜியில் சாதாரண டிப்ளமோ முதல் எம்.டெக் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வரை உள்ளன.  
பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகள் :
B.Tech. Paint Technology
Diploma in Paint Application Technology
M.Tech. Paint Technoogy
Paint and Varnish Technology
B.Tech. Surface Coating Technology
M.Tech. Surface Coating Technology
Post Graduate Program in Paint And Coating Technology
பல்வேறு பொறியியல் படிப்புகளை நடத்தும் 
பல்கலைக் கழகங்களும் பெயிண்ட் டெக்னாலஜி படிப்புகளை நடத்தி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு:
http://www.isspa.org/members-area/educational.asp
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com