வேலை...வேலை...வேலை...

தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலை
மத்திய ஜவுளி அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NHDC/HR/Rectt/CE/2017/07/01
மொத்த காலியிடங்கள்: 09
பணி: Deputy Manager (Finance & Accounts)
பணி: Assistant Manager (Finance & Accounts)
தகுதி:   Deputy Manager மற்றும் Chartered Accountant  பதவிக்கு ERP, Tally, MS Office  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  மற்றும் இணையதளப்
பயன்பாடுகள்,  Finance/ Accounts/ Internal Audit போன்றவற்றில் திறன் பெற்றிருக்க  வேண்டும். அத்துடன்  Finance/ Accounts/ Internal Audit  ஆகிய
துறைகளில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Assistant Manager பதவிக்கு கல்வித் தகுதியில் மாறுதல் இருக்கும்.
வயது வரம்பு:  Deputy Manager  பதவிக்கு 40 வயதுக்குள் இருக்கவேண்டும். Assistant Manager பதவிக்கு 38 வயதுக்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை: www.nhdc.org.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்:  
Deputy General Manager (HR),
National Handloom Development Corporation Limited,
Wegmans Business Park, 4th Floor, Tower-1, Plot No.3, Sector Knowledge Park-III Surajpur Kasna Main Road, Greater Noida-201306, UP.
மேலும் விவரங்களுக்கு: http://nhdc.businesstowork.com/UPLOAD/onlineapp/Contract%20Basis%20Recruitment%20Detailed%20Advertisement.pdf என்ற
இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 31.07.2017

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை
பணி:  அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 14
தகுதி:  8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு). 
விண்ணப்பிக்கும் முறை:  http://www.tnrd.gov.in  - என்ற இணையதளத்தில்  மாதிரி  விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத்தாளில் எழுதி பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன்  அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  நேரிலும் விண்ணப்பத்தைத் தரலாம்.  
முகவரி:  இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4-ஆவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15
மேலும் விவரங்களுக்கு:  http://www.tnrd.gov.in/pdf/OA_new.pdf    -என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 31.7.17

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலை
பணி:  Assistant Manager -PR
காலியிடம்:  01
தகுதி:  ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் Post Graduate Diploma in Public Relations or Media and Communications  பிரிவில் முதுநிலை டிப்ளமோ பெற்றிருக்க
வேண்டும். அத்துடன்  5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: Junior Executive Civil
காலியிடம்:  01
தகுதி:  B.E/B.Tech (Civil)  படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு:  Assistant Manager பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 38.  Junior Executive (Civil) பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 30  மாற்றுத் திறனாளிகள்
மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.ennoreport.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager (CS & BD),  Kamarajar Port Limited,  
Vallur Post, Chennai -120  
தேர்வு செய்யப்படும் முறை:   எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவர்.
மேலும் விவரங்களுக்கு: http://www.ennoreport.gov.in/EXE_AC_2017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 01.08.2017

ஏர் இந்தியாவில் வேலை
பணி: Experienced Cabin Crew (Female), Trainee Cabin Crew (Female) 
மொத்த காலியிடங்கள்:  400
தகுதி:  +2 முடித்து,  மூன்றாண்டுகள் பட்டப் படிப்பு அல்லது ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி, டிராவல் & டூரிஸம் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்கவேண்டும்.  Experienced Cabin Crew பதவிக்குக் குறைந்த பட்சம் ஓராண்டு விமானத்தில் பணியாற்றிய அனுபவம் வேண்டும். Trainee Cabin Crew பதவிக்கு அனுபவம் தேவையில்லை.  திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். ஆங்கிலம் - ஹிந்தி சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் வெளிநாட்டு மொழியை அறிந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 
வயது வரம்பு:  Experienced Cabin Crew பதவிக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.  Trainee Cabin Crew பதவிக்கு 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும்). 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:  www.airindia.in - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவர்.
நேர்காணல் நடைபெறும் முகவரி: Training Hall, Ground Floor, Air India Admin Building, Opp. Post  Office, IGI Airport, Terminal- 1, Palam, New Delhi 110037. 
(நேர்காணல் நடைபெறும் தேதிகள்: ஆகஸ்ட் 4, 5, 6). 
மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.com/writereaddata/Portal/career/498_1_CabinCrewAdvertisement.pdfச் என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:   01.08.2017

தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையில் வேலை
பணி:  Assistant Engineer (Agricultural Engineering)
காலியிடங்கள்:  21
தகுதி:   B.E. (Agriculture), B.Tech (Agricultural Engineering), B.Sc., (Agricultural Engineering), B.E. (Mechanical) B.E. (Civil), B.Tech (Automobile
Engineering), B.E. (Production Engineering),  B.E.(Industrial Engineering) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.  தமிழ்
மொழியாற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:   18 வயது நிரம்பியவர்களாக  இருக்கவேண்டும்.  அதிக பட்ச வயது வரம்பில்லை.  
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_16_asst_engr_agri_backlog.pdf  என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  02.08.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com