அருங்காட்சியகங்களில்  பணிபுரிய...!

இந்தியா முழுவதும் சுமார் 700 அருங்காட்சியகங்கள் உள்ளன.  அரசு அருங்காட்சியகங்கள் மட்டுமல்லாது,
அருங்காட்சியகங்களில்  பணிபுரிய...!

இந்தியா முழுவதும் சுமார் 700 அருங்காட்சியகங்கள் உள்ளன.  அரசு அருங்காட்சியகங்கள் மட்டுமல்லாது, மிகவும் பழமையான பொருட்களை வாங்கி வீட்டில் அழகுக்காக வைத்துப் பராமரித்து வரும் மிகப்பெரும் செல்வந்தர்களும், மிகவும் பழமையான விலை மதிக்க முடியாத பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருபவர்களும் அது சம்பந்தமான படிப்பான மியூசியோலஜி, மியூசியம் ஸ்டடீஸ் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கு அமர்த்துகின்றனர். 

ஏனெனில் அருங்காட்சியகங்கள் என்றால் பல நூற்றாண்டுகளைக் கடந்த மிகவும் பழமை வாய்ந்த விலை மதிக்க முடியாத, வரலாற்று சிறப்பு மிக்க, கலை நுணுக்கங்கள் நிறைந்த பொருட்களை முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.  அத்தகை பணியில் அதை முழுமையாக அறிந்தவரே பணி செய்ய வேண்டும்.  அதுகுறித்த வரலாற்றுத் தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.  அத்தகைய பழமையான, விலைமதிக்க முடியாத பொருட்கள் சேதமடைந்தாலோ, திருட்டுப் போனாலோ அதனைத்  திரும்ப வாங்க முடியாது.

ஏனெனில் அவை கடைகளில் விற்பனை செய்யக் கூடிய பொருட்கள் அல்ல.

அதனால் அதனுடைய முக்கியத்துவம், கலாசாரம், பாரம்பரியம், மதிப்பு, வரலாற்று தகவல் அறிந்தவர்களால் மட்டுமே அந்த பணியைச் செய்ய இயலும்.

அதற்கான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் : 
1. NATIONAL  MUSEUM  INSTITUTE of History of Art, Conservation and Museology - http://nmi.gov.in/
2. The Maharaja Sayajirao University , Baroda -  www.msubaroda.ac.in
3. Jiwaji University, Gwalior- www.jiwaji.edu 
4. Banaras Hindu University -  www.bhu.ac.in
மியூசியோலஜி சம்பந்தமான படிப்புகள் :
Advance Diploma in Archaeology and Museology
Post Graduate Diploma in Museology
B.A. History with Archeology and Museology
B.A. Museology and Archaeology
M.A. Museology
M.Sc. Museology
Ph.D. Museology 
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com