இணைய வெளியினிலே!

"தீய குறைச்சி இளஞ்சூடா வைய்யி!'' போகிற போக்கில் காதில் விழுந்த சொற்கள். தமிழின் சில சொற்கள் வியப்பில் சுழன்று கொண்டே இருக்கின்றன.
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
* எங்கு பொழிந்தாலும்
கேட்க.
மழை. 
வானத்தின்
மொழியல்லவா?
-லதா அருணாச்சலம்

* காதலிகளுக்கு 
கவிதை பிடிக்க 
இதுவே காரணம்...
வாசிப்பதும் 
தூக்கி எறிந்துவிடுவதும்
எளிது.

* காலங்கடந்தும் 
வருபவனைப் பற்றி 
பேசிக் கொண்டிருக்கிறாய்...
கடந்த காலத்திலிருந்து வந்திருக்கும் 
என்னைக் கண்டுகொள்ளாமல்.
- ராம் சின்னப்பயல்

* உன்னைக் காதலித்து
ஏமாற்றிப் போனவள்
துரோகியல்ல...
அவள் உன் வாழ்க்கைப் பாதையை
விளங்கப்படுத்திய ஆசிரியை.
- காவலூர் அகிலன்

* அழகாக  இருந்தா...
சந்தோஷமா இருப்போமா?
தெரியாது.
ஆனால்...
 சந்தோஷமா இருந்தா...
 கண்டிப்பா அழகா இருப்போம்! 
- இனியவன்

* எல்லா நேரங்களிலும் 
முடிவுகளை உடனுக்குடன் எடுப்பது...
தவறான முடிவாக ஆகிவிடலாம்.
சில நேரங்களில் எந்த முடிவும்
எடுக்காமல் இருப்பதே
 சிறந்த முடிவாக இருக்கும்...
- செல்லி  ஸ்ரீநிவாசன்

* "தீய குறைச்சி இளஞ்சூடா வைய்யி!'' போகிற போக்கில் காதில் விழுந்த சொற்கள். தமிழின் சில சொற்கள் வியப்பில் சுழன்று கொண்டே இருக்கின்றன. இளம் - இளசு - இளமை தொடர்புடைய சொற்களால் சூழ்கிறேன். இளவேனில் காலத்தையும் இளஞ்சூட்டுப் பருவம் என்பர்  கிராமத்தில் இயல்பாக! அதிகாலைக்கு சிற்றஞ்சிறு காலை என்ற ஒரு அழகான சொல் உண்டு! ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ இத்தகு நுட்பமான சொற்கள் உண்டா என்ற கேள்வி எனக்குள் சுழன்றபடியே இருக்கிறது.
- நேசமிகு ராஜகுமாரன்

வலைத்தளத்திலிருந்து...
செல்போன் என்கிற தகவல் தொடர்பு சாதனம் வருகிறது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள என்கிற நிலை மாறி இது கேமிராவாகவும் செயல்படுகிறது. போட்டோ எடுப்பது மட்டுமின்றி இதில் வீடியோவும் எடுக்கலாம். செல்போனும், இணையமும் இணைந்த புள்ளிதான் முக்கியமானது.
தான் எடுத்த போட்டோவையோ, வீடியோவையோ ஃபேஸ்புக்கில் பதிந்து அதை உலகின் அடுத்த மூலையில் இருப்பவனுக்கும் காட்ட முடிகிறது என்கிற "அதிகாரம்' சாமானியனுக்குக் கிடைக்கிறது. தானும் பிரபலம்தான் என்கிற எண்ணம் அவனுக்குள் இப்போது வேரூன்றுகிறது.
கருத்துக் களங்களும், வலைப்பூக்களும், சமூக வலைத்தளங்களுமாக இணையமெங்கும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஓராயிரம் வாசல்களில் கன்னாபின்னாவென்று நுழைந்து விளையாடுகிறான். நூறு லைக்கும், முப்பது கமெண்டும் பெற்றுவிட்ட பிறகு அவனாகவே "கெத்து' என்று நினைத்துக் கொள்கிறான். 
"நான்', "என்', "எனக்கு', "என்னுடைய', "என் வீடு', "என் அறை', "என் பைக்' "என் கார்' என்று ஃபர்ஸ்ட் பர்சனிலேயே பேச ஆரம்பிக்கிறான். எந்நேரமும் தன்னைத் தானே படமெடுத்து ஃபேஸ்புக்கில் போடுகிறான். "நைஸ்', "பியூட்டிஃபுல்' "ஹேண்ட்ஸம்' "அழகு' கமெண்டுகளுக்காக ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறான்.
http://www.luckylookonline.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com