தொடுதிரையாகும் கார் ஜன்னல்கள்!

நீண்ட தூர கார் பயணங்களில் சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடல்களைக் கேட்டு ரசிப்பதும், திரைப்படங்களைச் சிறிய திரைகளில் பார்ப்பதும் வழக்கம்.
தொடுதிரையாகும் கார் ஜன்னல்கள்!

நீண்ட தூர கார் பயணங்களில் சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடல்களைக் கேட்டு ரசிப்பதும், திரைப்படங்களைச் சிறிய திரைகளில் பார்ப்பதும் வழக்கம்.

ஆனால்,வெளிப்புற அழகைக் கண்டு ரசிக்க மட்டுமே பயன்பட்ட கார் ஜன்னல்கள், இப்போது நம்மிடம் பேசவும் செய்கிறது. மொபைல் போன் திரை எப்படி தொடுதிரையாகியதோ,அதேபோல் கார் ஜன்னல் கண்ணாடிகளும் தொடுதிரையாகி பயணிகளுடன் உரையாடப் போகின்றன.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், கார் ஜன்னல் கண்ணாடியில் தெரியும் வெளிப்புற பொருள்களை மொபைல் போனில் ஜூம் செய்து பார்ப்பதுபோல், இனி கார் கண்ணாடிகளிலும் பார்க்கலாம். 

உதாரணமாக, காரில் சென்று கொண்டிருக்கும்போது, ஏதாவது ஒரு பொருளை அருகில் காண விரும்பினால், காரை நிறுத்திவிட்டு வெளியே செல்லாமல் கார் ஜன்னல் கண்ணாடியில் அந்த பொருளை ஜூம் செய்து பார்த்தால் போதும்.

காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே தூரத்தில் தெரியும் பொருள்களுக்கும் காருக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு தூரம் என்பதைத் தொடுதிரையில் தெரிந்து கொள்ளலாம். கார் கண்ணாடிகளில் குழந்தைகள் கை விரலால் வரைந்தும் விளையாடலாம். அதுமட்டுமின்றி, கார் கண்ணாடிகளில் விரைவாக தோன்றும் வீடு, வயல் போன்றவற்றை கார் ஜன்னல் கண்ணாடி தொடுதிரையில் தொட்டு அவை தொடர்பான விளக்கங்களை வேண்டிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிந்து கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பம் குழந்தைகளை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தை விரைவில் நடைமுறைபடுத்த டோயோட்டோ கார் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com