வாங்க இங்கிலீஷ் பேசலாம் 92

கணேஷ் Long John Silver என்பவருக்குச்  சொந்தமான  Captain Flint என்ற கிளியை கணேஷ் அவரது அனுமதி பெறாமல்,
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 92

கணேஷ் Long John Silver என்பவருக்குச்  சொந்தமான  Captain Flint என்ற கிளியை கணேஷ் அவரது அனுமதி பெறாமல், கிளியின் வேண்டுகோளுக்கு
இணங்க எடுத்து வந்து விடுகிறான். வெளியே அவனை எதிர்கொள்ளும் புரொபஸர் அவனைக் கண்டிக்கிறார்.  அப்போது கிளி அவனை  நோக்கி “why don’t you take a long walk on a short pier” என  பழிக்கிறது.  அதன் பொருள்  பேசிக்  என்னவென கணேஷ்  வினவ  புரொபஸர்  விளக்குகிறார்.
புரொபஸர்:   சொல்லு. Pier என்றால்? போன செமஸ்டரில் வகுப்பில் நான் விளக்கினேனே?
கணேஷ்: சாரி சார். நான் அன்னிக்கு உங்களை கவனிக்கல.
புரொபஸர்: You are incorrigible. I am fed up with you Ganesh. வகுப்பை கவனிக்கலேன்னா என்கிட்ட இனிமே பேசாதே. Get lost.
Captain Flint: He isn’t incorrigible. He is honest. He wears his heart on the sleeve.
கணேஷ்: எனக்கு சப்டைட்டில் இல்லாம இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. புரியற மாதிரி திட்டுங்க!
Captain Flint: Incorrigible என்றால் திருத்த முடியாதபடி மோசமான ஒரு பேர்வழி என அர்த்தம். அதாவது repeat offender. பலமுறை மாட்டினாலும் திருந்தாத
குற்றவாளி.
கணேஷ்: சார் நான் அவ்வளவு பயங்கரமான குற்றவாளியா?
புரொபஸர்: நான் அப்படி நினைச்சு சொல்லல. சரி விடு. வகுப்பை கவனிக்காம இருக்கிறதை மட்டும் என்னால தாங்க முடியாது.
Captain Flint: I understand. எல்லா ஆசிரியர்களும் அப்படித் தான். ஒரு மாணவன் வகுப்பைக் கவனிக்க மறுக்கும் போது அவன் அந்த ஆசிரியரின் subject ஆக
மாற மறுக்கிறான். அதைத் தான் ஆசிரியால் தாங்க முடியாது போகிறது.
கணேஷ்: எனக்கு சத்தியமா புரியல. சார் teach பண்றது தான் subject.  நான் சாரோட ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற் கிடையாது.
Captain Flint: Subject என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. அதாவது ஒரு விவாதம் அல்லது விவரணையின் மையப் பொருளாக இருப்பதும் ஒரு subject.
GST வரி பற்றி என்ன நினைக்கிறாய்?” “I don’t know anything on that subject. அதாவது "எனக்கு அந்த மேட்டர் பற்றி   ஒண்ணுமே தெரியாது.'' அதே போல
உன் நண்பர்கள் எல்லாரும் உன்னை கேலி பண்ற மாதிரி ஒரு காரியம் பண்றே.
புரொபஸர் (ஜூஸ் உறிஞ்சியபடி): அதான் தினமும் பண்றானே!
Captain Flint: அப்போது you become of a subject of wide spread ridicule. 
கணேஷ்: subjected to praise என்றெல்லாம் வராதா?
Captain Flint: ம்ஹும்...
கணேஷ்: நான் இதை ஒத்துக்க மாட்டேன்.
Captain Flint: அடச்சே. ..  இது வெறும் உதாரணம்ப்பா.  அடுத்ததா, உன்னை எல்லாரும் சேர்ந்து கட்டி வச்சு அடிக்கிறாங்க.
கணேஷ்: ஏன்?
Captain Flint: சும்மா ஒரு கற்பனை.  
கணேஷ்: ஏன் பத்து பெண்கள் சேர்ந்து என்னை கொஞ்சுற மாதிரி கற்பனை பண்ணக் கூடாதா?
Captain Flint: அதெல்லாம் இந்த வார்த்தைக்கு ஒத்து வராது. சரி lets come back to the point. உன்னை எல்லாரும் சேர்ந்து டார்ச்சர் பண்ணினா you are
subjected to physical violence and torture. 
புரொபஸர்: The ordinary citizens of nation were subjected to a terrifying ordeal in the name of demonetization.
கணேஷ்:  சார் நீங்க முன்னாடி ரூபாய் நோட்டுத் தடையை ஆதரிச்சீங்களே? இப்போ மாறிட்டீங்களா?
புரொபஸர்: Yes!
Captain Flint: நான் இங்கே எவ்வளவு பொறுமையா உனக்குப் பாடம் எடுக்கிறேன். நீ  தேவையில்லாம  அரட்டை  அடிக்கிறே?
கணேஷ்: சாரி...
Captain Flint: பரவாயில்ல.  Subject  என்பதற்கு  தத்துவார்த்தமான பொருளும் உண்டு. நீ ஒரு வகுப்பில் இருக்கும் போது you are subjectified. அதாவது,  பாடம்
எனும் செயலினால் பாதிக்கப்பட்டு  ஒரு மாணவனாய்  மாறுகிறாய். அப்போது you become a subject.

கணேஷ்:   நான் எப்பவுமே மாணவன் தானே?
Captain Flint:  இல்லை. வகுப்பில் உன் புரொபஸரின் பேச்சை கவனித்து எதிர்வினையாற்றும் போது மட்டுமே நீ மாணவன் ஆகிறாய்.  இதைத் தான் அல்தூஸர்
எனும் பிரஞ்சு தத்துவஞானி interpellation என்கிறார்.
(இனியும்  பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com