+2 வுக்குப் பின் சில புதிய படிப்புகள்!

குளிர்பானங்கள், கேக், பிஸ்கெட், ஜெல்லி, ஜாம் போன்ற உணவுப் பொருள்களை வாங்கும்போது அவற்றின் டின், உறைகள் மீது அந்தப் பொருட்களில்
+2 வுக்குப் பின் சில புதிய படிப்புகள்!

குளிர்பானங்கள், கேக், பிஸ்கெட், ஜெல்லி, ஜாம் போன்ற உணவுப் பொருள்களை வாங்கும்போது அவற்றின் டின், உறைகள் மீது அந்தப் பொருட்களில் அடங்கியுள்ள இயற்கையான மற்றும் ரசாயனப் பொருள்கள் என்னென்ன அடங்கியுள்ளன என்று அச்சிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதில் கடைசியில் ஃப்ளேவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஃப்ளேவர் என்ற பொருள் மிகவும் முக்கியமானது.

நீங்கள் விரும்பிச் சாப்பிடும் பிஸ்கெட் ஏன் பிடிக்கிறது என்று கேட்டால், "அதன் டேஸ்டே தனி' என்றுதான் சொல்வீர்கள். அந்தச் சுவையை பிஸ்கெட்டுக்குக் கொடுப்பது ஃப்ளேவர்தான். இந்த ஃப்ளேவர்களைத் தயாரிக்க சில நிறுவனங்கள் உள்ளன. Food Flavourist என்பவரின் வேலை, தயாரிக்கப்படும் உணவுப் பொருளில் ஒவ்வொருவிதப் பொருளை (பெரும்பாலும் ரசாயனப் பொருள்கள்) ஒவ்வொரு விகிதத்தில் சேர்க்க வேண்டும். சிறப்பான ருசி கொண்டவற்றை எந்த விகிதத்தில் சேர்த்தால் அது மக்களுக்குப் பிடித்துப் போக வாய்ப்பு உண்டு என்பதைக் கண்டறிவதுதான் Food flavouristகள் வேலை. சிறப்பான ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தும் Food flavourist களுக்குச் சிறப்பான எதிர்காலம் உண்டு. இது தொடர்பான கல்வியும் அறிமுகமாகிவிட்டது.

இதற்கு +2வில் வேதியியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருத்தல் வேண்டும். இந்தத் துறை ரசாயனத்தோடு மிகவும் நெருங்கியது. ஸ்டவ், மைக்ரோ ஓவன், மிக்ஸி போன்றவையெல்லாம் உள்ள சோதனைச் சாலைகளில்தான் முக்கிய பணி இருக்கும்.

உணவுப் பொருள்களின் சுவை கூட்டுவது ஃப்ளேவரிஸ்ட் முக்கிய பணியாய் இருந்தாலும் இந்திய அரசு உணவுப் பொருள்களுக்கு நிச்சயித்த தரமும் குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். உடலுக்குத் தீங்கு செய்யாத, பாதுகாப்பான பொருளாகவும் இருப்பது அவசியம்.

இத்துறையில் பட்டப்படிப்பு சமீபகாலமாக அறிமுகமான ஒன்று.  இந்தக் கல்வியை மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹாஸ்பிடாலிடி அண்டு மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் அளிக்கிறது.

Food & Beverage Production / Service டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட் கோர்ஸ்கள் கற்றுத் தரப்படுகின்றன. 

M.Sc. In Food Science (2 Years) படிப்பும் உள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.iihm.co.in/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
- எம்.ஞானசேகர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com