மாணவர்களுக்குப் பயன்படும் தேசிய டிஜிட்டல் நூலகம்!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பாக தேசிய மின்னணு நூலகம் என்ற இணைய வழி டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குப் பயன்படும் தேசிய டிஜிட்டல் நூலகம்!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பாக தேசிய மின்னணு நூலகம் என்ற இணைய வழி டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலை கல்வியிலிருந்து, முதுநிலை கல்வி கற்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.  

இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த விரும்பமுள்ளவர்கள் https://ndl.iitkgp.ac.in/ இணையத்திற்குள் உள் நுழைந்து, தங்களை அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.   அவ்வாறு பதிவு செய்தவர்கள் அந்த டிஜிட்டல் நூலகத்தின் உறுப்பினர்களாகக் கருதப்படுவர். 

உறுப்பினர்கள் அந்த டிஜிட்டல் நூலகத்திற்குள் உள் நுழைந்து தங்களுக்குத் தேவையான மின்னணுப் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அவ்வாறு உள் நுழைவதற்கு உறுப்பினர்களுக்கு அடையாள குறியீட்டு பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவை வழங்கப்படும்.  அதனைப் பயன்படுத்தி டிஜிட்டல் நூலகத்திற்குள் உள் நுழைந்து புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

சுமார் 70 மொழிகளில் 3 லட்சம் நூலாசிரியர்களால் எழுதப்பட்ட சுமார் 7 லட்சம் நூல்கள்,  3 லட்சம் கட்டுரைகள், அதில் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 262 ஆடியோ விரிவுரைகள், 18 ஆயிரம் வீடியோ விரிவுரைகள் ஆகியவை இந்த டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மாணவர்களுக்கும், அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக இந்த டிஜிட்டல் நூலகம் கருதப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு:
National Digital Library Project
Central Library (ISO-9001:2008 Certified)
Indian Institute of Technology Kharagpur
Kharagpur
India - 721302
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com