வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 79

புரொபஸர் மற்றும் கணேஷ் சாமி படங்கள் விற்கும் கடையின் உரிமையாளருடன் உரையாடுகிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 79

புரொபஸர் மற்றும் கணேஷ் சாமி படங்கள் விற்கும் கடையின் உரிமையாளருடன் உரையாடுகிறார்கள். Treasure Island  எனும் நாவலில் வரும் ஒற்றைக் கால் கொள்ளைக்கார பாத்திரமான Long Silver John பிடித்துப் போய், அப்பெயரை தனக்கு வைத்துக் கொண்டதாக கடையின் உரிமையாளர் சொல்கிறார். 
புரொபஸர்: சரி, உங்களை எப்படிக் கூப்பிடறது?
Long Silver John: Call me Silver.
புரொபஸர்: So you are the pirate of the treacherous seas.
Silver: Yes captain, more treacherous than the seas.
கணேஷ்: தமிழுக்கு வாங்க பாஸ்.
Silver: Long John Silver என்பவன் Treasure Island நாவலில் ரொம்ப வித்தியாசமான சுவாரஸ்யமான பாத்திரம். ஒரு தீவில் புதைந்திருக்கும் புதையலைத் தேடிப் போகும் கடற்கொள்ளையர்களின் தலைவன். புத்திசாலி, துணிச்சலானவன். ஒரு காட்சியில் அவன் தனியா அஞ்சு பேரோட தன் ஒத்தைக்காலில் நின்னு சண்டை போடுவான். ஆனால் ரொம்ப ரொம்ப ஆபத்தானவன். சுயநலம் மிக்கவன். அவன் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்று கணிக்கவே முடியாது. அப்படி இருப்பது பேரு தான் treacherous. கடலின் சுபாவம் அப்படித்தானே? அதனாலே நாம் கடலையும் treacherous என்போம். 
கணேஷ்: Pirate என்பதும் piracyயும் ஒன்னு தானா?
Silver: Piracy என்ற சொல் கடலில் நடக்கும் கொள்ளை எனும் பொருளில் தான் முதலில் பயன்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் இருந்தே இது பற்றிய குறிப்புகள் உள்ளன. இப்போது ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் போது அதைத் திருடி இணையத்தில் வெளியிடும் கொள்ளையும் video piracy  என அறியப்படுகிறது. 
புரொபஸர்: கணேஷ் நாம போன வாரம் பிளாட்பாரத்தில ஒரு நாவல் வாங்கினோமே அது கூட pirated  தான்.
கணேஷ்: சார் அப்படீன்னா நாமளும் கொள்ளையில் பங்குதாரர்களா?
Silver: யார் தான் இல்ல? அதை book piracy என்போம். 
புரொபஸர்: எங்களுக்கு லேட் ஆகுது. தீபாராதனை ஆரம்பிச்சிடப் போகுது. எங்களுக்கு வெண்கலத்தில ஒரு பிள்ளையார் சிலை வேணும். 
Silver: சரி இதோ பாருங்க. பிள்ளையார் புல்லாங்குழல் வாசிக்கிறார். ரொம்ப விசேஷமான சிலை. விலையும் கம்மி தான். ஒரு லட்சத்து பத்தாயிரம்.
புரொபஸர்: Why in Gods name  its so costly?
கணேஷ்: ஏன் சார் கடவுளோட பேர் உங்களுக்குப் பிடிக்கலையா?
புரொபஸர்: அப்படி இல்லடா. ஓர் அதிர்ச்சியான மனநிலையில் ஒரு விஷயத்தை சொல்லும் போது இப்படி ஆரம்பிப்போம். அதுக்கு நேரடியான அர்த்தம் ஏதுமில்ல. Why in Gods name.
Silver: சார் கடவுள் சிலருக்கு பக்தியைக் கொடுக்கிறார், இன்னும் சிலருக்கு பணத்தைக் கொடுக்கிறார். And I serve the latter. அதோ பாருங்க (அவர் கடைக்கு வரும் சில வெள்ளையர்களைக் காட்டுகிறார்) கஸ்டமர்ஸைப் பார்த்திட்டு வந்திடறேன். (அவர் போகிறார். வெள்ளையர்கள் புரொபஸர் குறிப்பிட்ட வெண்கல பிள்ளையார் சிலையை வாங்கி விட்டு போகிறார்கள்)
Silver திரும்ப வருகிறார்: You know professor, the god sends nuts to those who have no teeth.
கணேஷ்: சார் உங்களுக்கு பல்லே இல்லேன்னு அவர் கண்டுபிடிச்சிட்டார்.
புரொபஸர்: இது ஒரு பழமொழிடா. பல்லில்லாதவனுக்கு பக்கோடா சாப்பிட ஆசைன்னு நம்ம ஊர்ல சொல்லுவோமே, அதோட ஆங்கில வடிவம். கடவுள் ஆசையைக் கொடுப்பார், பக்தியைக் கொடுப்பார், ஆனால் அதுக்கான பணத்தைக் கொடுக்க மாட்டார். அப்படித் தானே மிஸ்டர் சில்வர்?
Silver: Actually not sir. இதோட சரியான அர்த்தம் கடவுள் நிறைய பணத்தைக் கொடுப்பார், ஆனால் அதைப் பயன்படுத்தாத நிலைமையில் நம்மை வைத்து விடுவார். 
புரொபஸர்: சாரி, நான் குழப்பிக்கிட்டேன்.
Silver: நான் அந்த வெள்ளைக்காரங்களைச் சொன்னேன். அவங்களுக்கு இவ்வளவு அழகான சிலையை வாங்க பணம் இருக்கு. ஆனால் அது மேல பக்தியோ, தீவிர உணர்வோ வராது. அது அவங்களுக்கு ஓர் அலங்காரப் பொருள் அவ்வளவு தான். அவங்க பணம் வேஸ்ட்.
அப்போது அங்கே ஒரு கிளியின் சத்தம் கேட்கிறது: Pieces of eight Pieces of eight
புரொபஸர்: என்ன சத்தம்?
Silver: அது தான் Captain Flint.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com