இணைய வெளியினிலே!

கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. global warming அச்சுறுத்துகிறது. 
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
• நைட் ஒன்னரை மணிக்கு 
கால் பண்ணி.. 
"என்ன அண்ணே 
தூங்கிட்டீங்களா?''ன்னு 
கேட்கிறான் ஒருத்தன்.
- சித்தன் ஆனந்த்குமார்

• வாழ்க்கை என்பது
சோப்பு டப்பா மாதிரி...
ஒரு பக்கம் மூடியிருந்தா
ஒரு பக்கம் 
ஓட்டை இருக்கத்தான் 
செய்யும்..
- கொடைக்கானல் சந்திரசேகரன்

• யாருக்காகவும் 
மாறமாட்டேன் என்று...
கெத்தாக சுற்றித் திரிந்த நான்,
கோமாளியாக
மாறிப் போனேன்...
குழந்தைகளிடம்.
- வள்ளியின் மூத்த மகன்

• இந்த தேசத்தில் பற்றிய தீ,
தன் சட்டையில் பற்றுகிற வரைக்கும்...
எவரும் சட்டை செய்வதே இல்லை.
***
விழுங்க முடியாததை 
உடனே துப்பிவிடுங்கள்,
அது உணவாக இருந்தாலும் சரி,
உணர்வாக இருந்தாலும் சரி..
- கவிதா கவி

• நம் மெளனம் அவரவர் விருப்பம் போல மொழிபெயர்க்கப்பட்டு விடும்.
வாய்ல இருந்த கொழுக்கட்டைய,
தின்னு முடிக்கிறதுக்குள்ள,
மெளனம் சம்மதம்ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்யா?
- கணேசன் ராமசாமி

• உள்நாட்டில் கலாசாரம் 
மெல்ல மெல்ல அழிகிறது..
வெளிநாட்டில் துளிர்விட்டு 
வளர்கிறது..
டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 
தமிழ் திருமண விழாவில் நம் நாட்டு 
கலாசாரப்படி உணவு முறை....
- பபிதா

• பார்த்து நடந்து போங்கள்...
அவள் பார்வை மோதி...
சாலையெங்கும் சிந்தி கிடக்கிறது என் நெஞ்சம்.
- வெங்கடேஷ் சிஎஸ்கே

வலைத்தளத்திலிருந்து...
கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. global warming அச்சுறுத்துகிறது. 
வெயிலில் அரைநாள் பைக்கில் சுற்றினாலே உடம்பு படுத்துவிடுகிறது. பெண்களில் பலருக்கு "யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பதுபோல  கோடையின் வருகை அவர்களது உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் உபாதைகளால்  முன்னறியப்படுகிறது. 
டினோசார் போன்ற அத்தப் பெரிய ஜீவராசிகளே பருவநிலை மாற்றங்களால்தான் செத்து மடிந்தன  என்பதைப் படிக்கும்போது  ஒப்புக் கொண்டதைவிட இந்த வெயிலில் அலையும்போது சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.
எங்கள் கரிசல்காட்டில் கோடைக்கு பானக்கரம் என்று ஒரு பானம் தயாரிப்பார்கள். கருப்பட்டியும் புளியும் மட்டுமே கரைத்த நீர். என்ன தேவாமிர்தமாக இருக்கும்? அதை விட்டால் புளிச்சாணி என வாய்ச்சொல்லால் வழங்கப்படும் புளிச்ச தண்ணி - இது அரிசிச் சோற்றுப் பானையில் பழைய சோற்றுடன் ஊறி ஊறிப் புளித்த தண்ணீர்தான். கோடையில் இதில் பச்சைத் தண்ணி கலந்து புளிப்பை மட்டுப்படுத்தி கொஞ்சம் உப்பு சேர்த்துக் குடிக்கக் குடிக்க அது "கொண்டா... கொண்டா' என்று சொல்லும். இதன் நாகரீக வடிவம் அல்லது  மத்திய தர வர்க்க வடிவம்தான் கலைவாணர் "குடிச்சுப் பழகணும்' என்று பாடிய நீராகாரம்.
http:satamilselvam.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com