வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 80

கடவுள் படங்கள் மற்றும் சிலைகள் விற்கும் ஒரு கடையின் உரிமையாளரான Long Silver John என்பவருடன் புரொபஸரும் கணேஷும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 80

கடவுள் படங்கள் மற்றும் சிலைகள் விற்கும் ஒரு கடையின் உரிமையாளரான Long Silver John என்பவருடன் புரொபஸரும் கணேஷும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது Pieces of eight Pieces of eight என்று ஒரு கிளி கத்துவது கேட்கிறது. Long Silver John, அது தான் வளர்க்கும் கிளி என்கிறார்.

Long Silver John: வாங்க என் கிளியைக் காட்டுறேன். (அவர் இருவரையும் கடையின் உட்பகுதிக்கு அழைத்து செல்கிறார். ஒரு பெரிய ஏஸி அறையில் ஓர் அழகான கூண்டு. அது திறந்திருக்கிறது. டிவி ஓடிக் கொண்டிருக்கிறது. டிவியில் நயன்தாரா நடனமாடுகிறார். டிவியின் முன்பு ஒரு கிளி அமர்ந்திருக்கிறது. அது டிவியை "டொக் டொக்' என கொத்துகிறது)
Long Silver John: Captain Flint ஏன் டிவியை உடைக்கிறே?
Captain Flint: I am trying to give a French kiss
Long Silver John: The way you do it, kiss என்கிற சொல்லே உருவாகி இருக்காது. அதுக்குப் பதிலா டொடொக் என்ற சொல் முத்தத்துக்கு ஏற்பட்டிருக்கும்.
(Captain Flint  அதற்கு பதில் சொல்லாமல் விருந்தினர்களை தலையைத் திருப்பிப் பார்க்கிறது.)
Captain Flint: Who is this gentleman, may I know?
புரொபஸர்: I am professor (கணேஷைக் காட்டி) and this is my student Ganesh.
Captain Flint: Welcome to the ship.
Long Silver John  (புரொபஸரிடம் ரகசியமாய்): Captain Flint தான் ஒரு கப்பலில் இருக்கிறதா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்குது. நான் அவளோட கனவைத் தகர்க்க விரும்புவதில்லை. I let her live in her cuckoo’s world
கணேஷ்: அதென்ன சார் cuckoo’s world?
புரொபஸர்: Actually சரியான idiom அதில்ல. Live in a cloud cuckoo land தான் சரியான idiom.
Long Silver John: Yes sir, you are correct. Right on the money.
கணேஷ்: சார் கூக்கூ என்றால் குயில் தானே?
புரொபஸர்: யெஸ். அந்த பெயரில் ஒரு படம் கூட வந்திச்சே.
கணேஷ்: சார்... அப்படின்னா காக்கா கூட்டில் குயில் முட்டையிடுமே, அந்த கதையின் அடிப்படையில் இந்த இடியம் உருவாச்சுதா?
புரொபஸர்: No. இந்த சொலவடை அரிஸ்டோபேனஸ் எனும் ஒரு பழங்கால நாடக ஆசிரியர் எழுதிய Birds எனும் நாடகத்தில் இருந்து வந்தது. அது ஓர் அரசியல் பகடி நாடகம். நடக்கவே சாத்தியமில்லாத கற்பிதங்களை நம்பி ஏமாறுகிற மக்களையும் அவர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையும் கேலி பண்ணுவதற்காக அரிஸ்டோபேனஸ் அந்த நாடகத்தை எழுதினார். அதில் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த சிலர் அன்றாட வாழ்க்கையின் அலுப்பு தாங்காமல் ஒரு வனாந்தரம் நோக்கிச் செல்வார்கள். அப்போது அவர்கள் பறவைகளைச் சந்தித்து ஓர் ஐடியா கொடுக்கிறார்கள். பறவைகள் எப்போதும் மனிதனுக்கு அஞ்சி வானில் திரிகின்றன. மரக்கிளைகளில் ஒளிந்து வாழ்கின்றன. அதற்குப் பதிலாக பறவைகள் ஏன் வானில் தமக்கு என ஒரு தனி நகரத்தை அமைக்கக் கூடாது? பறவைகள் இந்த ஆலோசனையை வரவேற்று வானில் ஒரு பெரிய சுவரை எழுப்புகின்றன. தம் நகரத்தைக் கட்டி எழுப்புகின்றன. அப்போது நடக்கும் வேடிக்கைகள் தான் நாடகமே. இந்த பறவைகளின் நகரத்துக்கு அரிஸ்டோபேனஸ் அளித்த பெயர் தான் cloud cuckoo land.  அதாவது மேகங்களில் அமைந்த பறவைகளின் வாழிடம். இன்றும் நடப்புலகுக்கு சம்பந்தமில்லாத கற்பிதங்களில் உழல்பவர்களை living in a cloud cuckoo land என கேலி செய்வோம்.
கணேஷ்: சரி... அதென்ன right on the money? நான் இதை எங்கியோ கேட்டிருக்கேன் டிவியில?
Long Silver John: சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com