யுனெஸ்கோ நிறுவனம் நடத்தும் குறுகிய கால படிப்புகள்!

கல்வி என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து தரப்பு மக்களுடைய பிறப்புரிமையாகவே கருதப்படுகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் நடத்தும் குறுகிய கால படிப்புகள்!

கல்வி என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து தரப்பு மக்களுடைய பிறப்புரிமையாகவே கருதப்படுகிறது.  உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான கல்வி கொள்கைகளை வகுப்பதற்காக யுனெஸ்கோ நிறுவனத்தின் கீழ்  இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜூகேஷனல் பிளானிங் - (IIC) தொடங்கப்பட்டது. 

இந்த நிறுவனம் கல்விக் கொள்கைகளை வகுப்பதற்கான பல்வேறு குறுகிய கால பயிற்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.  பல்வேறு நாடுகளின் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும், தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளும் அலுவலர்களும் இக்குறுகிய கால படிப்புகளில் சேர்ந்து 
பயனடைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வி திட்டமிடலுக்கான தொழில்நுட்பங்கள், மதிப்பிடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.  பயிற்சிகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படுகின்றன.  இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. 
மேலும் விவரங்களுக்கு: http:www.iiep.unesco.org

-எம். அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com