குடிநீர் பந்துகள்!

குடிநீரை அருந்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்குகிறது.
குடிநீர் பந்துகள்!

குடிநீரை அருந்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்குகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மண்ணில் மக்க 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டைத் தடுப்பதில், லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆம், குடிநீர் பாட்டில்களுக்கு பதிலாக குடிநீர் பந்துகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு "ஓஹோ பபுல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

குடிநீரை மெல்லிய வெளிப்படையான சவ்வு கொண்ட பந்துகளில் அடைக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு நீர்பந்துகளைப்போல் காட்சியளிக்கும் இந்த குடிநீர்ப் பந்துகளில் உள்ள சவ்வை நீக்கவிட்டு அப்படியே வாயில் போட்டு குடித்துவிடலாம். 

வாயில் மெல்லிய அழுத்தம் கொடுத்தவுடன் இந்த குடிநீர் பந்து வெடிக்கிறது. இதைத் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடற்பாசியில் இருந்து எடுக்கப்படுகிற சோடியம் அல்ஜினேட் மற்றும் கால்சியம் குளோரைட் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த குடிநீர் பந்து சவ்வை உண்பதால், உடலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. 

குடிநீர் பாட்டில்களை உருவாக்க ஆகும் செலவை விட குடிநீர் பந்துகளை உருவாக்க ஆகும் செலவு குறைவு. இந்தப் பந்தை அப்படியே உண்டாலும் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை.  

குளிர்பானங்களும் இந்த வகையான பந்துகளில் அடைத்து விற்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக விளையாட்டு மைதானங்களில் "ஓஹோ பபுல்' குடிநீர் பந்துகளை அறிமுகப்படுத்தி, பின்னர் உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த குடிநீர் பந்துகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயம் இல்லை. இது காலத்தின் தேவையும் கூட.
- அ.சர்ஃப்ராஸ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com