தடய அறிவியல்துறை படிப்புகள்! 

காவல் துறையில் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, எஸ்பி என பல்வேறு கட்டங்களில்
தடய அறிவியல்துறை படிப்புகள்! 

காவல் துறையில் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, எஸ்பி என பல்வேறு கட்டங்களில் பல்வேறு பணியிடங்கள் உள்ளன.  அவைதவிர, நுணுக்கமான முறையில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்க அது சம்பந்தமான தொழில்நுட்பம் படித்தவர்களும் காவல் துறையில் பணிபுரிகின்றனர்.  சைபர் கிரைம் எனப்படும் இணைய வழியில் நடைபெறும் குற்றங்களைக் கண்டுபிடிக்க கணினி அறிவியல், இணையம் சம்பந்தமான படிப்புகளைப் படித்தவர்கள் காவல்துறையில் பணிபுரிவது போல குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் தடய அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

கொலை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்த இடத்தில் அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து  தடய அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் கண்டுபிடிப்பார்கள்.  டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் பிரிவினர் செய்வார்கள்.

தடய அறிவியல் பிரிவில் பணிபுரிவதற்கு சில குறிப்பிட்ட படிப்புகளைப் படித்திருக்க வேண்டும்.  அதில் ஆராய்ச்சி படிப்புகள், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் என பல படிப்புகள் உள்ளன. 
அவற்றில் சில: 
Forensic Science and Criminology       
Forensic Entomology
Forensic Science and Fingerprint
Cell Phone Forensics (Mobile)
Questioned Documents and Handwriting Private Investigator (Detective)
Forensic Science and Document Examination
Forensic Science and Forensic Graphology
Document and Fingerprint Examination
Wildlife Forensics and Nature Conservation
Fingerprint Expert Crime Scene Investigation
Cyber Forensics, Cyber Crimes, Cyber Security & Cyber Law,
Disk Imaging and eDiscovery
Cyber Forensics
Cyber Law
Forensic Biotechnology and DNA Fingerprinting
Forensic Science and Cyber Forensics
Forensic Science and DNA Fingerprinting
Forensic Pharmacy (Pharmaceutical Jurisprudence) 

இத்தகைய படிப்பினை நடத்தும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் :
Lok Nayak Jayaprakash Narayan National Institute of Criminology & Forensic Science (LNJN   NICFS), Delhi - http://www.nicfs.nic.in/
Bundelkhand University - JHANSI - https://www.bujhansi.ac.in/
index.aspx
Dr.Bhim Rao Ambedkar University- Agra - http://www.dbrau.org.in/
Amity Institute of Forensic Sciences - http:www.amity.edu
Osmania University, Hyderabad - http:www.osmania.ac.in 
University of Madras - Chennai -  http://www.unom.ac.in/
IFS  INTERNATIONAL FORENSIC SCIENCES -http://www.ifs.edu.in/

- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com