வாங்க இங்கிலீஷ் பேசலாம் 88

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver  என்பவரின் கடையில் அவரது Captain Flint  என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 88

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver  என்பவரின் கடையில் அவரது Captain Flint  என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கணேஷ்: Keep up with என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் உண்டு என்று சொன்னியே?
Captain Flint  (கொட்டாவி விட்டபடி): நான் ஒரு ஆசிரியன் அல்ல. சும்மா பாடம் எடுத்துக்கிட்டே இருந்தா போரடிக்குது.
கணேஷ் தன் பாக்கெட்டில் இருந்து வறுத்த முந்திரி எடுத்து நீட்டுகிறான்:  இந்தா சாப்பிடு
Captain Flint: வெரி குட். நீ ஒரு சிறந்த மாணவன். முந்திரி பருப்பு மூளை வளர்ச்சிக்கு நல்லது தெரியுமா? சரி keep up with தானே? நீ "பொல்லாதவன்' படம் பார்த்திருக்கேல்ல?
கணேஷ்: அஞ்சு தடவை பார்த்திருக்கேன்.
Captain Flint: வெரி குட். அந்த படத்தில் தனுஷ் சில வாடிக்கையாளர்களோட பைக்கை பறிமுதல் செய்யச் செல்வார். ஏன்?
கணேஷ்: அவங்க ஒழுங்கா லோன் தவணை கட்டாததனால்.
Captain Flint: குட். அதையே இங்கிலீஷ்ல சொல்றதுன்னா they failed to keep up with the loan payments. அதாவது கடன் தவணையை ஒழுங்கா கட்டுறது
அல்லது கட்டத் தவறுவது. 
கணேஷ் : ஓ!
Captain Flint: அதே போல கரெண்டாக, அப்டேட்டாக இருப்பதையும் keep up with என்று சொல்லலாம். 
கணேஷ்: புரிஞ்சிருச்சு. 
Captain Flint: இந்த அர்த்ததில தான் நான் அந்த தாத்தா உதாரணம் சொன்னேன்.  Keep up to date with, keep in touch with, keep abreast of ஆகிய சொற்றொடர்களையும் இதே பொருளில் பயன்படுத்தலாம். உதாரணமா, The PM keeps abreast of the goings on in Tamil Nadu politics through the governor. 
கணேஷ்: அதென்ன goings on?
Captain Flint: சற்றே வினோதமான அல்லது சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள். உதாரணமாக, எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆளுங்கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க
திட்டமிட்டால் அதை ஆளுநர் மூலம் பிரதமர் அறிந்து கொள்வார்.
கணேஷ்: அறிந்து கொண்டு?
Captain Flint: கவுக்கிறதா வேண்டாமான்னு முடிவு செய்வாங்க. அதெல்லாம் நமக்கெதுக்கு ?
I keep up with my relatives next town by sending them gifts and greeting cards. அதாவது, பக்கத்து ஊரில் உள்ள என் உறவினர்களுக்கு பரிசுகளும் வாழ்த்தட்டைகளும் அனுப்பி அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். இதையே stay in touch with, maintain contact with என்றும் சொல்வார்கள். அதே போல இன்னொரு வித்தியாசமான பொருளிலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.
கணேஷ்: என்ன?
Captain Flint: இதுக்கு முன்னாடி நான் விக்டோரியா மகாராணியின் pet ஆக இருந்த போது அவங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் இரவுகளில் மது விருந்து,
நடனம் என ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். அவங்க அதையெல்லாம் முடிச்சுட்டு விடியற வரைக்கும் என் கிட்ட பேசுவாங்க. கவிதை, தத்துவம், வரலாறு
என பல விசயங்கள். நான் தூங்கித் தூங்கி விழுவேன். அவங்க என்னைத் தூங்க விடாம வச்சு பேசுவாங்க. She keeps me up all night with her chatter.  
கணேஷ்: ஓ தூங்க விடாம வைக்கிறதையும் இப்படிச் சொல்லலாமா? இப்போ வயித்து வலியினால எனக்கு தூங்க முடியலைன்னா?
Captain Flint: Stomach ache kept me up all night. அதே போல when Queen Victoria was down she kept her spirits up by reading Shakespeare. விக்டோரியா ராணி டல்லா இருந்தால் ஷேக்ஸ்பியரோட நாடகங்கள் படிச்சு தன்னை உற்சாகமா வச்சுப்பாங்க. 
கணேஷ்: நீ கொஞ்ச முன்னாடி "I Krishnadevaraya' நாவல் பற்றி குறிப்பிட்டாய் அல்லவா? அதில் ரெண்டு கேள்விகள்.
Captain Flint: என்னென்ன?
கணேஷ்: ஒன்று, நீ சொன்ன வாக்கியத்தில் ஒரு பிழை. இன்னொன்று translate என்று சொன்னியே... அதைப் பற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com